Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பொதுமக்கள் பார்வைக்காக புதிய பாராளுமன்றம் திறப்பு! மத்திய அரசு அறிவிப்பு!!

#image_title

பொதுமக்கள் பார்வைக்காக புதிய பாராளுமன்றம் திறப்பு! மத்திய அரசு அறிவிப்பு!

தற்போது புதிதாக கட்டப்பட்ட பாராளமன்ற கட்டிடத்தை பொதுமக்கள் பார்வைக்காக திறக்கபடவுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

புதிதாக கட்டப்பட்டுள்ள பாராளுமன்ற கட்டிடம் கடந்த வாரம் ஞாயிற்றுக் கிழமை அதாவது கடந்த 28ம் தேதி திறக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இந்த புதிய பாராளுமன்ற கட்டிடத்தை திறந்து வைத்தார். இந்த திறப்பு விழாவில் பல்வேறு கட்சித்தலைவர்கள் கலந்து கொண்டனர். அதுபோலவே பல எதிர்க்கட்சிகள் இந்த திறப்பு விழாவை புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து லோக்சபா நாயக்கர் ஓம் பிர்லா அவர்கள் “நவீன தொழில்நுட்பங்களுடன் கட்டப்பட்டுள்ள இந்த புதிய பாராளுமன்ற கட்டிடத்தை பொதுமக்கள் பார்வையிட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி ஆசைப்படுகிறார்” கூறியிருந்தார்.

இதற்கான ஏற்பாடுகளை பிரதமர் மோடி அலுவலகமும், லோக் சபாநாயக்கர் அலுவலகமும் செய்து வருகிறதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக பிரத்யேக இணையதளம் உருவாக்கப்பட்டு வருகின்றது. இந்த இணையதளத்தில் மக்கள் புதிய பாராளுமன்ற கட்டிடத்தை பார்வையிட நேரம், தேதி ஆகியவற்றை முன்பதிவு செய்து கொள்ளலாம். முன்பதிவு செய்வதற்கு முகவரிச் சான்று, அடையாளச் சான்று ஆகியவற்றை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

புதிய பாராளுமன்றமானது பொதுமக்களின் பார்வைக்காக பாராளுமன்ற கூட்டம் நடைபெறாத நாட்களில் திறக்கப்படவுள்ளது. அதாவது கூட்டம் நடைபெறாத சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் காலை 11 மணி முதல் மதியம் 3.30 மணி வரை பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்படவுள்ளதாகவும் சுற்றிப் பார்ப்பதற்கு ஒரு நபருக்கு ஒரு மணிநேரம் ஒதுக்கப்படும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது. புதிய பாராளுமன்ற கட்டிடத்தை திறப்பதற்கு கட்டணம் வசூலிக்கப்படுமா என்பது பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

 

Exit mobile version