Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஆபரேஷன் கஞ்சா வேட்டை 4.0 ஸ்டார்ட்! தமிழக காவல் துறை அறிவிப்பு!!

#image_title

ஆபரேஷன் கஞ்சா வேட்டை 4.0 ஸ்டார்ட். தமிழக காவல் துறை அறிவிப்பு.
தமிழகத்தில் கஞ்சா விற்பனையை தடுக்க தமிழக காவல்துறையினர் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். கஞ்சா விற்பவர்களை உடனடியாக கைது செய்து வரும் காவல் துறையினர் மேலும் இது தொடர்பாக தமிழக காவல்துறை முக்கிய அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் பல இடங்களில் கஞ்சா விற்பனை செய்யப்படுகின்றது. கல்லூரிகள், பள்ளிகள், குடியிருப்பு நகர்கள் என பல இடங்களில் கஞ்சா விற்பனை ரகசியமாக நடந்து கொண்டிருக்கிறது. இதனை தடுக்க தமிழக காவல் துறையினர் பல நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும் கஞ்சா விற்பனை என்பது தடுக்க முடியாத ஒன்றாக இருக்கிறது. இதைத் தடுக்க தமிழக காவல் துறையினர்  கஞ்சா வேட்டை 4.0 என்ற ஆபரேஷனை தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதுவரை கஞ்சா வேட்டை 4.0 ஆபரேஷனுக்கு கீழ் நடந்த சோதனையில் கடந்த 6 நாட்களில் 659 கஞ்சா வியாபாரிகளை தமிழக காவல்துறை கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்ட இந்த கஞ்சா வியாபாரிகளிடம் இருந்து 728 கிலோ கஞ்சாவும், 15 டன் குட்காவும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று காவல்துறை அறிவித்துள்ளது.
கஞ்சா விற்பனை நடப்பது யாருக்காவது தெரிய வந்தாளோ அல்லது போதைப் பொருள்கள் பற்றி புகார் கொடுக்க நினைக்கும் நபர்கள் 044-28447701 என்ற எண்ணிற்கு அழைத்து புகார் தெரிவிக்கலாம் எனவும் புகார் தெரிவிக்கும் நபர்களின் ரகசியம் காக்கப்படும் எனவும் தமிழக காவல்துறை அறிவித்துள்ளது.
Exit mobile version