Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

“ஆப்ரேஷன் மின்னல் வேட்டை” தமிழகத்தில் ஒரே நாளில் 133 ரவுடிகள் சிக்கினர்!

“ஆப்ரேஷன் மின்னல் வேட்டை” தமிழகத்தில் ஒரே நாளில் 133 ரவுடிகள் சிக்கினர்!!

தமிழகத்தில் நடந்த ஆபரேஷன் மின்னல் ரவுடி வேட்டையில் 133 முக்கிய ரவுடிகள் பிடிபட்டுள்ளனர். இந்த 133 பேரில் கொலை, கொள்ளை வழக்குகளில் பிடியானை பிறப்பிக்கப்பட்டவர்கள் 15 பேர்கள், இதில் 13 ரவுடிகள் பல ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த குற்றவாளிகள்.ரவுடி வேட்டை குறித்து டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்ட செய்தி குறிப்பில் கடந்த 24 மணி நேரத்தில் மின்னல் ரவுடி வேட்டை தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டது.

இதில் 133 முக்கிய ரவுடிகள் பிடிபட்டனர் மற்றும் கொல்லை வழக்குகளில் நிலுவையில் இருந்த 15 பேர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளன. பல ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த பிரபல ஏபிளஸ் 13 ரவுடிகளும் சிக்கினர். இவர்கள் மீது பல்வேறு கொலை, கொள்ளை, நில அபகரிப்பு போன்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது.பிடிபட்ட மற்ற 15 பேரிடம் விசாரணை நடந்து வருகிறது. இந்த ரவுடி வேட்டை தமிழகம் முழுவதும்  நடைபெறும் என்று கூறியுள்ளார்.

Exit mobile version