Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஆப்ரேஷன் தாமரை! அலறும் தெலுங்கானா முதலமைச்சர்!

இந்தியாவில் தற்போது உள்ள சூழ்நிலையில் பல மாநிலங்களில் பாஜக ஆட்சி நடத்தி வருகிறது.

இதுவரையில் புதுச்சேரியில் தாய் தூக்காத பாஜக தற்போது என் ஆர் காங்கிரஸ் கட்சியுடன் கைகோர்த்து கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. அதே போன்ற ஒரு நிலையை தமிழகத்தில் ஏற்படுத்திட அந்த கட்சி தீவிரமாக முயற்சித்து வருகிறது.

அந்த கட்சி எதிர்வரும் தமிழக சட்டசபை தேர்தலில் எப்படியாவது 50 சட்டசபை உறுப்பினர்களை பெற்றுவிட வேண்டும் என்பதில் மிக உறுதியாக இருந்து வருகிறது. அப்படி பாஜக 50 சட்டசபை உறுப்பினர்களைப் பெற்றுவிட்டால் நிச்சயமாக அந்த கட்சியின் தயவு இன்றி எந்த கட்சியும் ஆட்சி அமைக்க இயலாது என்ற சூழ்நிலை ஏற்பட்டுவிடும். அப்படி ஒரு சூழ்நிலையை ஏற்படுத்துவதற்காக தான் அந்த கட்சி அரும்பாடு பட்டு வருகிறது.

இதற்கு நடுவே மகாராஷ்டிராவில் உத்தரவின் ஆட்சியை கவிழ்த்து தற்போது அங்கே ஆட்சி அமைத்திருக்கிறது தேவேந்திர பத்மவேஸ் அந்த மாநிலத்தின் முதல்வராக தற்போது இருந்து வருகிறார்.

அதோடு உத்தரவு தாக்குரேவின் காட்சியை இரண்டாக உடைத்ததன் விளைவாக பாஜக அங்கே தான் நினைத்ததை சாதித்து விட்டது என்றும் சொல்லப்படுகிறது.

அதே போல தான் தன்னுடைய புத்திசாலிரியத்தால் ஆட்சியை தன் வசப்படுத்தி இருக்கிறது பிஜேபி.

அதே புத்திசாலிரியத்தை தற்போது தெலுங்கானாவில் காட்ட அந்த கட்சி முயற்சித்து வருவதாக சொல்லப்படுகிறது தெலுங்கானாவில் முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்டிரிசமிதி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது.

இந்த கட்சியை சார்ந்த 4 சட்டசபை உறுப்பினர்களை பாஜக விலைக்கு வாங்க முயற்சிப்பதாக சமீபத்தில் காவல்துறையில் புகார் வழங்கப்பட்டது. இது குறித்து 3 பேர் கைது செய்யப்பட்டார்கள் என்று சொல்லப்படுகிறது.

இப்படியான நிலையில் தான் இடைத்தேர்தல் நடக்கும் முனுகோடா சட்டசபை தொகுதியில் நேற்று நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் சந்திரசேகர ராவ் நம்முடைய கட்சியை சார்ந்த 20 முதல் 30 சட்டசபை உறுப்பினர்களை விலைக்கு வாங்கி ஆட்சியை கவிழ்க்க பாஜக சதித்திட்டம் தீட்டியுள்ளது.

இதற்காக ஒவ்வொரு சட்டசபை உறுப்பினருக்கும் தல 100 கோடி ரூபாய் தருவதாக ஆசை காட்டி வருகிறார்கள் என்று தெலுங்கானாவின் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் குறிப்பிட்டிருக்கிறார்.

Exit mobile version