#பாலியல்_ஜல்சா_கட்சி – பாலியல் புகாரால் பாஜகவை பங்கம் செய்த எதிர்க்கட்சியினர்

0
136

#பாலியல்_ஜல்சா_கட்சி – பாலியல் புகாரால் பாஜகவை பங்கம் செய்த எதிர்க்கட்சியினர்

பிரபல ஊடகவியலாளர் மதன் ரவிச்சந்திரன் குறுகிய காலகட்டத்தில் பல தொலைக்காட்சி சேனல்களில் பணி புரிந்து வெளியேறியவர்.இவர் தொகுத்து வழங்கிய அரசியல் விவாத நிகழ்சிகளில் பாரபட்சமின்றி அனைவரையும் சரமாரி கேள்விகளால் துளைத்து எடுப்பவர்.இதனால் அரசியல் ஆர்வலர்களிடம் மிகவும் பிரபலமானார்.

இந்நிலையில் அவர் தனியாக மதன் டைரிஸ் என்ற யூ டியூப் சேனலை துவக்கி அதில் தமிழக அரசியல் குறித்து பல்வேறு தகவல்களை பகிர்ந்து வருகிறார்.அந்த வகையில் சமீபத்தில் பாஜகவின் மாநில பொறுப்பாளர் கே.டி.ராகவன் குறித்து அவர் வெளியிட்ட வீடியோ தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாஜகவின் பொதுச்செயலாளர் பதவி வகித்து வந்தவர் தான் கே.டி.ராகவன்.இவர் தமிழக பாஜகவின் சார்பாக தொலைக்காட்சி விவாதங்களில் கலந்து கொண்டு கட்சியினர் மத்தியில் மிகவும் பிரபலமானார்.இந்நிலையில் இவர் பெண் நிர்வாகி ஒருவருடன் அத்து மீறி நடந்து கொண்டதாக சமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவை தான் மதன் டைரிஸ் என்ற யூ டுயூப் சேனல் வெளியிட்டுள்ளது.ஏற்கனவே கூறியுள்ளது போல இந்த சேனலை பிரபல ஊடகவியலாளர் மதன் ரவிசந்திரன் நடத்தி வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே.மேலும் இவர் சமீபத்தில் தான் பாஜகவில் இணைந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.அந்த வகையில் தன் கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகியின் மீதே இப்படியொரு பாலியல் குற்றசாட்டை சுமத்தும் வீடியோவை வெளியிட்டுள்ளது தான் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்த விவகாரத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட எதிர்க்கட்சிகள் பாஜகவை கடுமையாக விமர்சித்து வருகின்றன.அந்தவகையில் ” #பாலியல்_ஜல்சா_கட்சி ” என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி ட்விட்டரில் பாஜகவிற்கு எதிராக ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.தமிழகத்தில் ஆட்சியிலிருக்கும் திமுகவை எதிர்க்கட்சியான அதிமுகவை விட பாஜக தான் தீவிரமாக எதிர்த்து வந்தது அந்த வகையில் பாஜக நிர்வாகியின் இந்த பாலியல் விவகாரம் திமுகவிற்கு சாதகமாக அமைந்து விட்டது.

இதனையடுத்து திமுகவினரும் பாஜகவிற்கு எதிராக ட்விட்டரில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.அதில் சில பதிவுகள்