கட்சிக்குள் தேர்தல் வைக்கும் எதிர்கட்சி! இனி இதுதான் நிரந்தரம்! வெளியிட்ட மேலிடம்!

0
127
Opposition to hold elections within the party! This is permanent forever! Posted on!

கட்சிக்குள் தேர்தல் வைக்கும் எதிர்கட்சி! இனி இதுதான் நிரந்தரம்! வெளியிட்ட மேலிடம்!

அதிமுக கடந்த பத்து பத்து வருடங்களாக ஆட்சி செய்த நிலையில் அதன் முன்னாள் முதல்வரான ஜெ.ஜெயலலிதா ஆட்சி செய்து கொண்டிருக்கும் போது திடீரென இறக்க நேரிட்டது. அதன் காரணமாக அந்த கட்சிக்கு முதலில் முதல்வராக ஓ. பன்னீர்செல்வம் இருந்து வந்த நிலையில், அதன் பிறகு கட்சி உறுப்பினர்கள் அனைவரும் ஒரு மனதாக முடிவு செய்து எடப்பாடி பழனிசாமியை முதல்வராகினர்.

அதன் பிறகு கடந்த 2016 ம் வருடத்தில் இருந்தே இரண்டு தலைவர்கள் என்ற நிலையில் தான் அதிமுக ஆட்சி செய்து வந்தது. எனவே அதில் ஒருவர் ஒருங்கிணைப்பாளர் என்றும், அடுத்தவர்  இணை ஒருங்கிணைப்பாளர் என்றும் பதவி ஏற்றுக்கொண்டு கடந்த ஐந்து வருடங்களாக ஆட்சி செய்து வந்தனர். இந்த நடைமுறையில் தான் அதிமுக செயல்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது திமுக ஆட்சி பொறுப்பை ஏற்றது.

தற்போது பரபரப்பாக உள்ள அரசியல் சூழலில் அதிமுகவின் செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுகவில் இனி ஒரு தலைமை என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும், இனி அதிமுகவைப் பொறுத்தவரை இரட்டை தலைமைதான் தொடர்ந்து வழிநடத்தி நாட்டை ஆட்சி செய்யும் என்பதை உறுதி செய்யும் விதமாகவும், ஒரு தீர்மானம் அதில் நிறைவேற்றப்பட்டது.

அந்தக் கூட்டத் தொடரின் கடைசியில் கட்சியின் சட்ட விதிகளில் திருத்தம் மற்றும் 11 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணைப்பாளர் ஆகியோரின் தேர்தல் இந்த மாதம் வருகிற 7ஆம் தேதியன்று நடைபெறும் என்றும், 8 ம் தேதியில் இதற்கான தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் அதிமுகவின் தலைமைக் கழகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக இன்று வெளியிட்ட அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளது. பிரிவு இரண்டின் படி கழக அமைப்புகளின் பொது தேர்தல் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை கண்டிப்பாக நடத்திட வேண்டும் என்றும், விதிமுறைக்கேட்ப ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற தேர்தலுக்கு தேவையானவை கீழ்க்கண்ட அட்டவணைப்படி  அமைக்கப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத் தக்கது.

தேர்தல் ஆணையாளர்கள்:
பொன்னையன்  கழக அமைப்புச் செயலாளர், முன்னாள் அமைச்சர்.
பொள்ளாச்சி வி. ஜெயராமன், எம்.எல்.ஏ கழக தேர்தல் பிரிவுச் செயலாளர், முன்னாள் அமைச்சர்.
வேட்பு மனு தாக்கல்:
3.12.2021 வெள்ளிக் கிழமை முதல் 4.12.2021 சனிக் கிழமை (காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை).
வேட்பு மனு பரிசீலனை:
5.12.2021- ஞாயிற்றுக் கிழமை காலை 11.25 மணி
வேட்பு மனு திரும்பப் பெறுதல்
6.12.2021 திங்கட் கிழமை மாலை 4 மணி வரை.
தேர்தல் நாள்:
7.12.2021- செவ்வாய்க் கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை
வாக்கு எண்ணிக்கை மற்றும் தேர்தல் முடிவு அறிவிப்பு
8.12.2021 புதன் கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை