Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

எதிர்க்கட்சி துணை தலைவர் விவகாரம் சட்டமன்றத்தில் சபாநாயகர் அனுமதி மறுப்பு! அதிமுக வெளிநடப்பு!!

#image_title

எதிர்க்கட்சி துணை தலைவர் விவகாரம் சட்டமன்றத்தில் சபாநாயகர் அனுமதி மறுப்பு! அதிமுக வெளிநடப்பு!!

அதிமுகவில் கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற பொதுக்குழு தொடர்பாக பன்னீர்செல்வம் தரப்பில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் படி பொதுக்குழுவில் எடுத்த முடிவுகள் அனைத்தும் செல்லுபடியாகும் என தீர்ப்பு வழங்கியதை தொடர்ந்து அதிமுகவின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் படி அதிமுகவில் பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியில் நீக்கப்பட்டதை தொடர்ந்து, அவர் வகித்து வந்த எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியையும் இழக்க நேரிட்டது, இதனை தொடர்ந்து சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கை தொடர்பாக எடப்பாடி பழனிசாமி ஒரு கவன ஈர்ப்பு தீர்மானத்தை இன்று கொண்டு வந்தார்.

அதிமுகவில் இருந்து பன்னீர்செல்வத்தை நீக்கிய பிறகு அவரை எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கையில் அமர வைத்திருப்பது மற்றும் இன்னமும் அவரை துணை தலைவர் பொறுப்பில் வைத்திருப்பதும் ஏற்றுக்கொள்ள கூடியது அல்ல, எனவே இந்த தீர்மானத்தை உடனடியாக நிறைவேற்றும் படி சபாநாயகரிடம் முறையிட்டனர்.

ஆனால் சபாநாயகர் இன்று ஆளுநருக்கு எதிரான தீர்மானத்தை முதல்வர் கொண்டு வந்துள்ளதால் முதலில் அதை நிறைவேற்றி விட்டு நாளை உங்கள் தீர்மானம் பற்றி விவாதிப்போம் என கூறினார்.

இதனை தொடர்ந்து சபாநாயகரின் இந்த முடிவால் சட்டமன்றத்தில் அதிமுக உறுப்பினர்கள் பெறும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் சட்டமன்றத்தில் அவை நடவடிக்கைகள் பதிக்கப்பட்டது. இந்நிலையில் அவர்கள் அனைவரும் அவை வெளிநடப்பு செய்தனர்.

Exit mobile version