Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அதிமுக தலைமைக்கழகம் எடுத்த அதிரடி நடவடிக்கை! அதிர்ச்சியில் முக்கிய புள்ளி!

இன்றைய தினம் அதிமுகவின் தலைமை கழகத்தில் இருந்து வெளியிடப்பட்டிருக்கும் அறிவிப்பு ஒன்றில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஒருவர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கழகத்தின் கொள்கை மற்றும் கோட்பாடுகளுக்கு விரோதமாக செயல்பட்ட காரணத்தால், அதோடு கழகத்தின் ஒழுக்கத்திற்கு மாசு ஏற்படுத்தும் விதமாக நடந்து கொண்ட காரணத்தாலும் கழகத்தின் கட்டுபாட்டை மீறி அதற்கு களங்கம் மற்றும் அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்ட காரணத்தாலும்,

காஞ்சிபுரம் மாவட்டத்தை சார்ந்த ரஞ்சித்குமார், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சுந்தர்ராஜ், முன்னாள் அமைச்சர் பொழுது நகர் கிழக்கு மாவட்டத்தைச் சார்ந்த ராமராஜ் பாண்டியன் வேல்முருகன் போன்றவரும் வடசென்னை தெற்கு மாவட்டத்தைச் சார்ந்த நீலகண்டன் ஆகியோரும் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட எல்லா பொறுப்புகளிலிருந்தும் இன்று முதல் விடுவிக்கப்படுகிறார்கள். ஆகவே கழகத்தின் உடன்பிறப்புகள் யாரும் இவர்களுடன் எந்தவிதமான தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

Exit mobile version