சென்னை ஜேஜே நகரில் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது இந்த அம்மா உணவகத்திற்கு நேற்றைய தினம் ஸ்டாலின் அவர்களின் புகைப்படத்துடன் அந்த திமுகவினர் அங்கே இருக்கக் கூடிய ஊழியர்கள் மீது கடுமையான தாக்குதலை தொடுத்து இருக்கிறார்கள். அதோடு அங்கே இருந்த அம்மா உணவக புகைப்படத்தை வெளியே எடுத்து கிழித்துப் போட்டு விட்ட நிலையில், அதனை காலால் எட்டி உதைத்து அராஜகம் செய்திருக்கிறார்கள். இந்த சம்பவம் சமூகவலைத்தளங்களில் வீடியோவாக பரவ தொடங்கியது இது குறித்து பல்வேறு தரப்பினரும் இந்த செயலுக்கு தங்களுடைய கண்டனத்தை பதிவு செய்திருக்கிறார்கள்.
அதோடு இனிய அம்மா உணவகம் கிடையாது என்பது போன்ற தகாத வார்த்தைகளால் அவர்கள் திட்டியும் இருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில், சென்னை ஜேஜே நகரில் இருக்கின்ற அம்மா உணவகம் சேதப்படுத்தப்பட்ட சம்பவத்திற்கு அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள்.
இதுதொடர்பாக அதிமுக சார்பாக வெளியிட்ட அறிக்கையில் தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி திமுக ஆட்சி அமைய இருக்கிறது என்ற செய்தி வந்த ஒரு சில தினங்களிலேயே திமுகவினர் தங்களுடைய வன்முறையையும், அரசியல் அநாகரியகத்தையும் செயல்படுத்த தொடங்கி விட்டார்கள். இது மிகப்பெரிய கண்டனத்திற்கு உரியது. உலகமே வியந்து பார்க்கும் அளவிற்கு எல்லா நாடுகளும் பின்பற்ற வேண்டிய ஒரு மிகச்சிறந்த திட்டம் என்று எல்லோராலும் பாராட்டப்படும் அம்மா உணவகத் திட்டத்தை புரட்சித்தலைவி அம்மா அவர்கள் உண்டாக்கினார்கள்.
சென்னை ஜெஜெ நகரில் இருக்கின்ற அம்மா உணவகம் மீது திராவிட முன்னேற்றக் கழகத்தினர் தாக்குதல் நடத்தியிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விஷயமாகும். தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம் என்று மகாகவியின் கூற்றுக்கிணங்க யாரும் பசியினால் வாழக்கூடாது என்று மிகச்சிறந்த எண்ணத்தினால் புரட்சித்தலைவி அம்மா அவர்களால் ஏழை எளிய மக்களுக்காக செயல்படுத்தப்பட்ட திட்டம் அம்மா உணவகம்.ஆகவே மாண்புமிகு அம்மா அவர்களின் சிந்தனையில் உண்டாகிய இந்த மக்களுக்கான அம்மா உணவக திட்டத்தின் சிறப்பை புரிந்துகொண்டு இன்றளவும் அண்டை மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் கூட இந்தத் திட்டத்தையும் பின்பற்றி வருகிறார்கள்.
மழை வெள்ளம் தொடங்கி நோய்த்தொற்றுகள் பேரிடர்கள் வரையும் உணவின்றி தவிப்போரின் பசியை போக்குவதற்காக அட்சய பாத்திரமாக இருக்கும் அம்மா உணவகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஏழைகளின் வயிற்றில் தாக்குதல் நடத்துவதற்கு சமமாகும். மாண்புமிகு அம்மா அவர்களுடைய புகைப்படத்தை சேதப்படுத்தி இருப்பதும் வேதனை அளிக்கின்றது. இந்த தாக்குதலை வன்மையாக கண்டிக்கின்றோம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ஆகவே ஆட்சிப் பொறுப்பு ஏற்க இருக்கும் ஸ்டாலின் அவர்கள் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பை சீர்குலைக்க முயற்சிப்போரின் மீது உடனடியாக சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம் என்று அந்த அறிக்கையில் கேட்டுக் கொள்ளப் பட்டிருக்கிறது.இந்த நிலையில், அந்த உணவகத்தை சேதப்படுத்திய இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. அதேநேரம் அவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார்கள் ஆனால் இதில் வேடிக்கை என்னவென்றால் அவர்கள் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக சொல்லப்பட்டது.
அதேநேரம் ஸ்டாலின் அவர்களால் அந்த இரண்டு பேரும் கட்சியிலிருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டு இருக்கிறார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது. ஆனால் அவர்கள் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்திருந்தாலும் உடனடியாக அவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இப்படி தமிழகத்தின் அனைத்து தரப்பு மக்களாலும் கண்டனத்திற்கு உள்ளான செயலை செய்த அந்த இருவரையும் உடனடியாக ஜாமீனில் விடுவிக்க சொன்னது யார் என்ற கேள்வி எழுந்திருக்கிறது.ஏதோ ஒப்பிற்கு கைது செய்து வழக்குப்பதிவு செய்து விட்டு உடனடியாக அவர்களை விடுதலை செய்வதற்கு ஜாமீன் கொடுத்தது யார் என தமிழகம் முழுவதும் பரவலாக கேள்வி எழுப்ப தொடங்கியிருக்கிறார்கள். ஒரு சிலர் இது வெறும் ஆரம்பம் தான் என்றும் தெரிவித்திருக்கிறார்கள்.
இது வெறும் டிரைலர் தான் உடன்பிறப்புகளின் அட்டகாசம்! ஓபிஎஸ் இபிஎஸ் கண்டனம்!
