சென்னை விமான நிலையத்தில் பிரதமர் மோடியை சந்திக்க காத்திருந்த ஓபி எஸ் மற்றும் ஈபி எஸ்-க்கு ஏமாற்றம்!!

0
270
#image_title

சென்னை பயணத்தை முடித்துக் கொண்டு விமானத்தில் புறப்படும் முன் பிரதமர் மோடி ஓபி எஸ்-ஐ தோளில் தட்டியும் ஈபி எஸ்- க்கு வணக்கம் மட்டும் வைத்தும் தனித்தனியாக சந்திக்காமல் புறப்பட்டுச் சென்றார்.

பாரத பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நலத்திட்ட பணிகளை துவக்கி வைக்க இன்று மாலை சென்னை வந்த பிரதமரை தமிழக ஆளுநர் , முதலமைச்சர் முக ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலரும் வரவேற்றனர்.

சென்னை விமான நிலையத்தில் பிரதமர் மோடியை ஓ பி எஸ் – இ பி எஸ் இருவரும் தனித்தனியே சந்தித்து பேச நேரம் கேட்டிருந்தனர்.

சென்னையில் நிகழ்ச்சியில் முடித்துக் கொண்டு பிரதமர் மோடி விமான நிலையத்திற்கு வந்த பொழுது, அனைத்து பிரமுகர்களையும் ஒரே வரிசையில் சந்தித்து வாழ்த்துக்களை பெற்றுவிட்டு, அப்போது இபிஎஸ் அவரிடம் வணக்கமும் அதன் பின் ஓபிஎஸ் தோளில் மீது தட்டிக் கொடுத்துவிட்டு மட்டும்ப் பிரதமர் மோடி விமான மூலம் மைசூர் புறப்பட்டு சென்றார்.

முன்னதாக பிரதமரை வழியனுப்ப ஒரு மணித்திற்குப் முன்பாகவே ஓ பி எஸ் – இ பி எஸ் விமானத்தில் காத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.