Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஓபிஎஸ் குடும்பத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு! மாபெரும் அதிர்ச்சியில் பன்னீர்செல்வம்!

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக இருந்து வரும் ஓபிஎஸ் தமிழகத்தின் முதலமைச்சராக மூன்று முறை இருந்திருக்கிறார்.

ஓ.பி.எஸ்ஸின் சகோதரர் ராஜா அதிமுகவில் இருப்பதால் அவர் எல்லோருக்கும் பரிச்சயமானவர் தான். ஆனால் அவருக்கு பாலமுருகன் என்று மற்றொரு சகோதரர் இருப்பது யாருக்கும் தெரிவதற்கான வாய்ப்பே இல்லை என்று சொல்லப்படுகிறது.

இவ்வாறான சூழ்நிலையில், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரான ஓபிஎஸ் சகோதரர் பாலமுருகன் பெரியகுளத்தில் இன்று காலம் ஆகியிருக்கிறார். உடல்நலம் பாதிக்கப்பட்டு பாலமுருகன் திருவனந்தபுரத்தில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று இரவு அவர் வீடு திரும்பியிருக்கிறார் இவ்வாறான சூழ்நிலையில், அவர் இன்று காலமாகி இருக்கிறார் என்று தகவல் கிடைத்திருக்கிறது.

ஓபிஎஸ்ஸின் சகோதரர் மரணம் காரணமாக, அவர் மிகுந்த மன உளைச்சலில் இருப்பதாக சொல்கிறார்கள். இதற்கிடையில் அதிமுகவை சார்ந்த பல பிரமுகர்கள் அவருக்கு ஆறுதல் தெரிவித்து வருகிறார்களாம்

Exit mobile version