Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஓபிஎஸ் நடத்தியது திமுக பினாமி மாநாடு! ஆர் பி உதயகுமார்

#image_title

ஓபிஎஸ் நடத்தியது திமுக பினாமி மாநாடு! ஆர் பி உதயகுமார்.
மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிபுக சார்பாக வாடிப்பட்டி மன்னாடி மங்கலத்தில், புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது. அதில் தமிழக சட்டமன்ற எதிர்கட்சி துணை தலைவர் ஆர் பி உதயகுமார் தலைமை தாங்கி தொண்டர்கயிடையே பேசும் போது.
அதிமுகவை விட்டு பிரிந்து சென்றவர்கள் சுயநலத்துடன் நமது இந்த இயக்கத்தை அடமானம் வைக்க துடிக்கின்றனர். அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையமும் எடப்பாடி பழனிசாமி, பொது செயலாளர் ஆனது செல்லும் என அறிவித்து விட்டது. அதன்பிறகும் அதிமுக கொடியை பன்னீர்செல்வம் பயன்படுத்தி இருக்கிறார்.
அவர் திருச்சியில் எதற்காக மாநாட்டை நடத்தினார். எதற்காக இந்த மாநாடு, அதிமுகவின் எந்த தொண்டனும் திமுக என்பது தீய சக்தி என்றுதான் கூறுவார்கள். திமுகவின் அவலங்களை  எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவும் நாட்டு மக்களுக்கு தோலுரித்தி காட்டினார்கள்.
தற்போது கூட திமுகவின் மக்கள் விரோத போக்கினை எடப்பாடி பழனிசாமி தோலுரித்து காட்டி வருகிறார். சட்டசபையில் காவல்துறை மானிய கோரிக்கையில் மூன்று மணி நேரம் உரையாடி, திமுகவுக்கு சிம்ம சொப்பனமாக எடப்பாடி பழனிசாமி இருந்தார். அவர்களை தோலுரித்து காட்டுவதுதான், அதிமுகவின் இலக்கணமாகும்.
அதிமுக கொடியை கட்டிக்கொண்டு, திமுகவை விமர்சிக்காமல் மாநாட்டை சிலர் நடத்தி இருக்கிறார்கள். திமுகவின் கைக்கூலியாகவும், பிரதிநிதியாகவும் வந்து மாநாட்டில் பலர் கலந்து கொண்டார்கள். திமுகவின் பினாமி மாநாடு போல் திருச்சியில் பன்னீர்செல்வம் தலைமையில் மாநாடு நடைபெற்று உள்ளது.
பன்னீர் செல்வம் 25 கோடி செலவு செய்து எடப்பாடி பழனிசாமியை திட்டுவதற்காக ஒரு மாநாடு நடத்தி இருக்கிறார். யார் தூண்டுதலால் இந்த மாநாடு நடந்து இருக்கிறது என்று மக்கள் புரிந்து கொண்டனர். மதுரையில் வருகிற ஆகஸ்டு மாதம் 20-ந் தேதி நடைபெறும் மாநாட்டினை இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் எடப்பாடி பழனிசாமி நடத்தி காட்டுவார். என் ஆர் பி உதயகுமார் தெரிவித்தார்.
Exit mobile version