Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

திருச்சியில் ஓபிஎஸ் நடத்தும் முப்பெரும் விழா மாநாடு! அதிமுக தலைமை அலுவலகம் போல முகப்பு 

#image_title

திருச்சியில் ஓபிஎஸ் நடத்தும் முப்பெரும் விழா மாநாடு! அதிமுக தலைமை அலுவலகம் போல முகப்பு

திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே பொன்மலை ஜி கார்னர் மைதானத்தில் ஓ பன்னீர்செல்வம் தலைமையில் முப்பெரும் விழா மாநாடு இன்று நடைபெற உள்ளது.

இதற்காக கடந்த 21ஆம் தேதி பந்தக்கால் நடும் பணி நடைபெற்றதை தொடர்ந்து மேடை அமைக்கும் பணி, நாற்காலிகள் போடும் பணி, அதிமுக கொடிகள் நடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்றது.

மாநாட்டு மேடையின் முகப்பு தோற்றம் அதிமுகவின் தலைமை அலுவலகம் போன்று அமைக்கப்பட்டுள்ளது.மாநாட்டு நிகழ்வுகளை தொண்டர்கள் பார்வையிட பல்வேறு இடங்களில் அகண்ட எல்இடி திரை வைக்கப்பட்டுள்ளது.

தொண்டர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் மாநாட்டு திடலில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த மாநாட்டுக்கான பாதுகாப்பு பணியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் ஈடுபடஉள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Exit mobile version