ஈபிஎஸிற்கு தலைவலியாக மாறிய ஓபிஎஸ்!

0
162

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முன்னாள் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் ஸ்டாலினுக்கு ஒரு சில கோரிக்கைகளை வலியுறுத்தி இருக்கிறார்கள். முன்னாள் முதல்வரும் , தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அதிமுக அரசு நோய் தொற்று தடுப்பு பணியின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண தொகை வழங்கியது.

அதேபோல தற்போதும் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தும் விதமாக முன்னாள் முதல்வரும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி ஒரு அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார். அந்த அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, தினக்கூலி மற்றும் ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுனர்கள் முடி திருத்துவோர் மற்றும் கைத்தறி அதோடு விசைத்தறி நெசவாளர்கள் தீப்பெட்டி தொழிலில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்கள், அதேபோல பட்டாசு தொழிலில் ஈடுபட்டு இருக்கக்கூடிய தொழிலாளர்கள் குயவர்கள் ,நடைபாதை வியாபாரிகள், வெளிமாநில தொழிலாளர்கள் அமைப்புசாரா தொழிலாளர்கள், கட்டுமானப் பணியை மேற்கொள்ளும் தொழிலாளர்கள் உள்ளிட்ட பல ஏழை-எளிய தொழிலாளர்களுக்கு கடுமையான பாதிப்பை இந்த நோய் தொற்று . ஏற்படுத்தியிருக்கிறது.

இவ்வாறு கடுமையாக பாதிக்கப்பட்ட அவர்களுக்கு இதுவரையில் எந்தவிதமான நிவாரணத் தொகை வழங்கப்படவில்லை என்று தெரிவித்திருக்கிறார். ஆகவே எனது தலைமையிலான அதிமுக அரசு வழங்கியதைப் போல அனைத்து தொழிலாளர்களுக்கும் நிவாரண உதவித்தொகை மற்றும் சிறப்பு உணவு தொகுப்பை உடனடியாக வழங்கிட வேண்டும் எனவும், அதோடு 2000 உதவிதொகையும் உணவு தொகுப்பினை கொரோனாவின் நிவாரணமாக வழங்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சரை கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

இது ஒரு புறமிருக்க முன்னாள் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இதுதொடர்பாக அவர் தெரிவித்திருப்பதாவது, சென்னை மீனம்பாக்கம் முதல் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு முற்பட்ட 15 கிலோமீட்டர் கான சாதாரண அவசர ஊர்திகளுக்கு 6 ஆயிரத்து 500 ரூபாயும் ஆக்சிஜன் வசதியுடைய அவசர ஊர்திகளுக்கு 9 ஆயிரம் ரூபாய் வரையும் கட்டணம் வசூலிக்க படுவதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன என்று தெரிவித்திருக்கிறார். அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தை விட மூன்று மடங்கு அதிகமாக வசூலிக்கப்படுவது ஏற்றுக்கொள்ள இயலாத ஒன்று அதோடு கண்டிக்கத்தக்கது என்று தெரிவித்திருக்கிறார்.

இதுதொடர்பாக விசாரணை நடத்தி ஏழை எளிய மக்களின் துயரத்தை போக்கும்படியாக அவசர ஊர்தி கட்டணத்தில் கொள்ளை அடிக்கும் விதமாக செயல்படும் தனியார் அவசர ஊர்தி உரிமையாளர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அரசு நிர்ணயம் செய்த கட்டணமே தமிழகம் முழுக்க இருக்கும்படி உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.

அத்துடன் ஓபிஎஸ் இபிஎஸ் என்று இருவரும் தனித்தனியே முதல்வருக்கு கோரிக்கை வைத்திருப்பது சந்தேகத்தை கிளப்பி இருக்கிறது. அதாவது சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் யார் என்பது தொடர்பாக இபிஎஸ், ஓபிஎஸ் உள்ளிட்டவருக்கு இடையில் மாபெரும் பிரச்சினை எழுந்தது. அதில் இறுதியாக இபிஎஸ் எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு அதிமுக சார்பாக 60 சட்டசபை உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையில் முதல்வர் வேட்பாளர் என்ற ஒன்றை நாம் விட்டுக் கொடுத்து விட்டோம் எதிர்க்கட்சித் தலைவர் என்ற பதவியாவது நம்மை வந்து சேரும் என்று மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த ஓபிஎஸ்க்கு இது மிகப் பெரிய ஏமாற்றமாக இருந்ததாக சொல்கிறார்கள். எனவே அவர்கள் இருவருக்கும் இடையில் பனிப்போர் நிகழ்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. அந்தப் பனிப்போர் எப்போது வேண்டுமானாலும் மிகப்பெரிய விரிசலை உண்டாக்க வல்லது என்று தெரிவிக்கப்படுகிறது.

அவ்வாறு இருவருக்கும் இடையில் விரிசல் உண்டு ஆனால் அதில் நிச்சயமாக சசிகலா மறைமுக அரசியலில் ஈடுபடுவார் என்று தெரிவிக்கப்படுகிறது. ஏனென்றால் ஓபிஎஸ் அவர்களின் பின்னால் சசிகலா தான் இருக்கின்றார் என்று பல்வேறு இடங்களில் பேச்சுக்கள் அடிப்பட்டுக் கொண்டு வருகின்றன.அவ்வாறு ஒருவேளை ஓபிஎஸ் தந்திர நடவடிக்கையில் ஈடுபட்டால் அது நிச்சயமாக தற்போதைய எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடிபழனிசாமி மிகப்பெரிய தலைவலியை ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகிறது.