Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

களத்தில் குதித்த முதல்வர்கள்! நிவாரணப் பணிகளில் சுழலும் ஸ்டாலின்!

புயல் கரையை கடந்து இருக்கின்ற நிலையில் புயல் ஏற்படுத்திய சேதங்கள் கடுமையாக இருக்கின்றது இந்த நிலையில் முதல்வர், மற்றும் துணை முதல்வர், அதோடு அமைச்சர் பெருமக்கள் ஆகியோர் புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகளை துரிதப்படுத்தி வருகிறார்கள் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் சென்னையில் பாதிக்கப்பட்டு இருக்கின்ற இடங்களை காலை 8 மணி முதல் பார்வை விடுவார் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது நிவர் புயலின் கோர தாண்டவத்தால் கடலோர மாவட்டங்களில்,சூறைக்காற்றுடன் கொட்டித்தீர்த்த கனமழையால் சென்னை காஞ்சிபுரம் கடலூர் போன்ற கடலோர மாவட்டங்களில் பாதிப்பு மிகக் கடுமையாக இருக்கின்றது.

தாழ்வான பகுதிகளில் நீர் சூழ்ந்து இருக்கின்றது. பல ஆயிரக்கணக்கான மரங்கள் வேருடன் சாய்ந்து விட்டன மின் கம்பங்களும் சாய்ந்து இருக்கின்றனர் வீடுகளின் கூரைகள் காற்றில் அடித்துச் செல்லப்பட்டு விட்டன மரங்கள் சாலையில் விழுந்து இருக்கின்றார் மரங்களை அகற்றும் பணியில் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். அதோடு தாழ்வான பகுதிகளில் இருக்கின்ற வீடுகளை சூழ்ந்துள்ள மழை நீரை வெளியேற்றும் பணி மாநகராட்சி ஊழியர்கள் சார்பாக மிக தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது இந்த நிலையில் புயல் கரையை கடந்த மரக்காணம் மற்றும் கடலூர் ஆகிய பகுதிகளில் பாதிப்பு மிக அதிகமாக இருக்கின்றது.

கடலூர் மாவட்டத்தில் புயலால் ஏற்பட்டிருக்கின்ற பாதிப்புகளை பார்வையிடுவதற்காக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று பிற்பகல் சுமார் 2 30 மணி அளவில் கடலூர் செல்கின்றார் அதேபோல் எதிர்க்கட்சி தலைவரும் திமுக தலைவருமான ஸ்டாலின் நேற்று மழை கொட்டிய போதும் அதை பொருட்படுத்தாமல் மழையில் நனைந்தபடி கொளத்தூர் பெரம்பூர் மற்றும் திருவிக நகர் சைதாப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் மக்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்து நிவாரண பொருட்களை வழங்கி இருக்கின்றார். இந்த நிலையில் இன்று சைதாப்பேட்டை போன்ற பகுதிகளில் மக்களை சந்தித்து வருகின்றார் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம். சென்னையில் பாதிக்கப்பட்ட இடங்களை இன்று காலை 8 மணி முதல் பார்வையிடுவார் என்று அறிவிக்கப்பட்டு இருக்கின்றது முதலில் தரமணி பின்பு வேளச்சேரி ஆகிய தாழ்வான பகுதிகளை பார்வையிடுவார் அதன் பின்பு அம்பேத்கர் நகரில் இருக்கின்ற நிவாரண முகாமையும் அவர் பார்வையிடுவார் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது.

Exit mobile version