Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

முதல்வரும் துணை முதல்வரும் முக்கிய ஆலோசனை! பரபரப்பானது தமிழக அரசியல்!

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும் தமிழக துணை முதல்வருமான ஓ பன்னீர்செல்வம், மற்றும் துணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி ,ஆகியோரின் முன்னிலையிலே சென்னை ராயப்பேட்டையில் இருக்கின்ற அதிமுகவின் தலைமை கழகத்தில் இன்றைய தினம் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகின்றது.

மாலை நான்கு முப்பது மணி அளவில் நடைபெறவிருக்கும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் மண்டல பொறுப்பாளர்கள் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க இருக்கிறார்கள்.

சென்ற மாதம் 20ஆம் தேதி நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் சட்டசபை தேர்தல் குறித்து என்னென்ன பணிகள் மேற்கொள்ள வேண்டும், என்பது போன்ற ஆலோசனைகள் மற்றும் தாங்கள் செய்த வேலைகள் தொடர்பான விவரங்களுடன் இந்த கூட்டத்திற்கு கலந்து கொள்ள வரவேண்டும், என்று கட்சியின் தலைமை அறிவுறுத்தி இருக்கின்றது.

ஆகவே இன்றைய தினம் நடைபெறவிருக்கும் இந்த ஆலோசனை கூட்டத்தில் சட்டசபை தேர்தலை சந்திப்பதற்கு என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்த ஆலோசனை செய்யப்படும் என்று தெரிகின்றது.

Exit mobile version