தமிழகத்தில் நோய்த்தொற்றுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரமடைந்ததை தொடர்ந்து நோய் தொற்று பரவல் மெல்ல, மெல்ல, குறைய தொடங்கியது.
அதோடு இயல்பு நிலையும் மெல்ல, மெல்ல, திரும்பத் தொடங்கியது. ஆனால் தற்போது மீண்டும் இந்த நோய் தொற்று பரவல் அதிகாரிக்க தொடங்கி இருக்கிறது. இதனால் பொதுமக்கள் முதல் அரசியல்வாதிகள் அனைவரும் கலக்கமடைந்திருக்கிறார்கள்.
அந்த வகையில் சமீபத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு நோய் தொற்று பாதிப்பு ஏற்பட்டது இதன் காரணமாக, அவர் உடனடியாக தன்னை தன்னுடைய வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொண்டார். அதனை தொடர்ந்து சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டு 2 நாட்களுக்கு முன்னர் வீடு திரும்பினார்.
அடுத்ததாக அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக இருந்து வந்த பன்னீர்செல்வத்திற்கு நோய் தொற்று பாதிப்பு ஏற்பட்டது. அவர் மருத்துவமனையை சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று வீடு திரும்பவிருப்பதாக சொல்லப்படுகிறது.
பன்னீர்செல்வம் நோய்த்தொற்று காரணமாக, பாதிக்கப்பட்டு கடந்த 4 தினங்களாக சென்னை அமைந்தகரையில் இருக்கின்ற தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கடந்த 18ஆம் தேதி நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தலில் பன்னீர்செல்வம் கவச உடையை அணிந்து கொண்டு வந்து வாக்களித்தார். இந்த நிலையில், சிகிச்சை முடிவடைந்து மருத்துவமனையிலிருந்து இன்று மாலை வீடு திரும்ப இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது.