ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்த ஓபிஎஸ்.. தேடிவரும் அதிமுக தலைமை பதவி! ஆட்டம் காணும் இபிஎஸ்!
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் இடையே தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பொதுக்குழு கூட்டம் நடத்தி அதில் இடைக்கால பொது செயலாளர் ஆக எடப்பாடி பழனிச்சாமி நியமிக்கப்பட்டார். இதனை அடுத்து ஓபிஎஸ் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தே நீக்கப்பட்டன. இதனை எதிர்த்து ஓ பன்னீர்செல்வம் நீதிமன்றத்தில் பொதுக்குழு கூட்டம் செல்லாது என்றும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்ட பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளர் செல்லாது என்றும் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்து பொதுக்குழு கூட்டம் செல்லும் என்றும் எடப்பாடி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டது சரிதான் என்றபடி தீர்ப்பு வந்தது. இதனை எதிர்த்து ஓபிஎஸ் அவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கு செய்துள்ளார். இந்த வழக்கு விசாரணை முடியும் வரை அதிமுக எந்த ஒரு தேர்தலையும் நடத்தக்கூடாது என்று உத்தரவு பிறப்பித்தது. எடப்பாடி அவர்கள் பொதுசெயலாளர் தேர்தல் நடத்த திட்டமிட்டதெல்லாம் வீணாகி போனது. இந்நிலையில் ஓபிஎஸ் அவர்கள் ஓர் செய்தியாளர்கள் பேட்டியில் விரைவில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று கூறியுள்ளார்.
தற்பொழுது இவ்வாறு இவர் கூறியதற்கான தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த இடைக்கால பொதுச் செயலாளர் விவகாரம் உச்ச நீதிமன்றம் வரை போகும் என்பது ஓபிஎஸ் முன்பே கூட்டியே கணித்து வைத்தது தான் எனக் கூறுகின்றனர். அந்த வகையில் பன்னீர்செல்வம் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டது செல்லாது என நீதிமன்றம் கூறி உத்தரவிட்டால் இவர் தற்பொழுது கட்சியில் நியமித்துள்ள உறுப்பினர்கள் பதவிகள் அனைத்தும் செல்லும் என நினைத்துள்ளார்.
ஒருவர் பின் ஒருவராக நிர்வாகிகளை நியமித்து வந்த ஓபிஎஸ் தற்பொழுது பொதுக்குழு கூட்டம் போட்டி நடத்தும் அளவிற்கு ஆட்களை நியமித்துள்ளதாக கூறுகின்றனர். இதனை முதலில் சர்வ சாதாரணமாக நினைத்த எடப்பாடிக்கு தற்பொழுது பெரும் அடியாக உள்ளது. நாளடைவில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றால் ஒருவர் கூட எடப்பாடி பக்கம் நிற்க மாட்டார்கள் அவருக்கு வாக்களிக்கவும் மாட்டார்கள் என்று கூறுகின்றனர். ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்தது போல அதிமுக ஒற்றை தலைமை மற்றும் நீதிமன்றத்தின் தீர்ப்பு என இரண்டும் இவருக்கு சாதகமாகவே அமைந்து விடும். இதனால் எடப்பாடி பக்கம் ஆட்டம் கண்டாலும் ஓ பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளதாக கூறுகின்றனர்.