ஓ பி எஸ் பற்றி தினகரன் போட்ட குண்டு! பீதியில் ஈ.பி.எஸ்!

0
124

சிறையிலிருந்து விடுதலையான சசிகலா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி தற்சமயம் பெங்களூரில் ஒரு வார காலம் ஓய்வுக்குப் பிறகு தமிழகம் திரும்ப திட்டமிட்டிருக்கிறார்.

நேற்றைய தினம் சசிகலா மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆன போது அவருடைய காரில் அதிமுக கொடி பறக்க விடப்பட்டு இருந்தது அதிமுகவிற்கும் தமிழக அரசியலிலும் இது மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி இருப்பதாக சொல்கிறார்கள்.

சசிகலா அவருடைய காரில் தமிழகத்தின் ஆளும் திமுகவின் கொடியை பறக்க விட்டு வந்தது சட்ட விதி மீறல் எனவும் அதிமுகவின் அடிப்படை உறுப்பினராக கூட இல்லாத ஒருவர் எவ்வாறு கட்சி கொடியை பறக்க விட முடியும் எனவும் சசிகலா விற்கும் அதிமுகவிற்கும் எந்த ஒரு சம்பந்தமும் கிடையாது எனவும் அதிமுகவின் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது எனவும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

பத்திரிக்கையாளர்களுக்கு ஜெயகுமார் எழுப்பிய கேள்விக்கு பதில் தெரிவித்த டிடிவி தினகரன் அதிமுகவின் பொதுச் செயலாளராக பொதுக்குழுவில் எல்லோராலும் தேர்ந்தெடுக்கப்பட்டவர் சசிகலா ஆகவே அந்த கட்சியின் கொடி அவரது காரில் பறக்க விடுவதற்கு அவருக்கு அதிகாரம் இருக்கிறது என்று தெரிவித்தார்.

சசிகலா அவர் இருப்பிடத்திற்கு சென்ற பிறகு சசிகலா தமிழகம் திரும்பும் சமயத்தில் அவருக்காக ஏற்பாடு செய்ய வேண்டிய வரவேற்பு தொடர்பாக மாவட்டச் செயலாளர்களிடம் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகளிடம் டிடிவி தினகரன் ஆலோசனை செய்து வருவதாக தகவல்கள் கிடைத்து இருக்கிறது.

அந்த சமயத்தில் அதிமுகவில் தற்சமயம் சின்னம்மாவை எல்லோரும் வெளிப்படையாகவே வரவேற்க தயாராக இருக்கிறார்கள் சொல்லப்போனால் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்களே சென்னையில் நம்முடைய சின்னம்மாவை வரவேற்க தயாராக இருக்கிறார் என்று நம்பிக்கை தெரிவித்து வருகின்றார்.

சென்ற ஜனவரி மாதம் 18ஆம் தேதி டெல்லியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சசிகலாவை அதிமுகவில் மீண்டும் இணைத்துக் கொள்ள மாட்டோம் என்று உறுதிபட தெரிவித்தார். ஆனாலும் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருந்து வரும் ஒரு பன்னீர்செல்வம் இது தொடர்பாக இதுவரை கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை இதன் காரணமாக பலரும் சந்தேகத்தில் இருக்கிறார்கள்.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் அதிகார பூர்வ நாளேடாக இருக்கும் நமது எம்.ஜி.ஆர் நாளேட்டில் சசிகலாவை அதிமுகவில் இணைத்துக் கொள்ள மாட்டோம் என்று அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் தானே தெரிவித்திருக்கிறார், ஆனால் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் என்ன சொல்லப் போகிறார் என்று பார்த்துவிடலாம் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதற்கு ஏற்றார்போல சசிகலாவை அதிமுகவில் இணைப்பது தொடர்பாக பன்னீர்செல்வம் இன்னும் எந்த ஒரு முடிவையும் தெரிவிக்கவில்லை அதுமட்டுமில்லாமல் பன்னீர்செல்வத்தின் இளைய மகன் ஜெயபிரதீப் தன்னுடப்பிய வலைதளப் பக்கத்தில் சசிகலாவிற்கு வாழ்த்துக்கள் கூட தெரிவித்திருந்தார்.

இந்த விஷயத்தின் பின்னணியில் முன்னரே தர்மயுத்தம் நடத்திய பொழுதே தினகரனை சந்தித்தவர் தான் பன்னீர்செல்வம் இந்த நிலையில், தற்சமயம் தினகரன் தெரிவிப்பது போல சசிகலா சென்னை வந்த பிறகு அவரை வரவேற்பதற்காக பன்னீர்செல்வம் செல்வாரா என்ற எதிர்பார்ப்பது சசிகலா தரப்பினர் இடையே உண்டாகி இருக்கிறது.