தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை ஆரம்பத்திலிருந்து பரவலாக மழை பெய்து வருகிறது, அனைத்து இடங்களிலும் பருவமழை இயல்பைவிட அதிகமாக மழை பதிவாகியுள்ளது. இதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் முதல் மறுபடியும் தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் உட்பட ஒரு சில பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
அந்த விதத்தில் நேற்று முன்தினம் முதல் சென்னையில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. நேற்று ஒரு சில கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மழை பெய்திருக்கிறது. இந்த சூழ்நிலையில், மேலும் 3 நாட்களுக்கு மழை நீடிப்பதற்கான வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
அதனடிப்படையில் தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், உள்ளிட்ட 9 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால், ஆகிய பகுதிகளில் கனமழையும், கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகளில் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் மிதமான மழையும், பெய்ய வாய்ப்பு இருக்கிறது. தஞ்சை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் நிர்வாக ரீதியாக மிக கனமழைக்கான ஆரஞ்சு அலார்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
நாளை கடலோர மாவட்டங்களில் அனேக பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழையும், உள் மாவட்டங்களில் லேசான மழையும், நாளை மறுநாள் தென் தமிழகத்தில் சில பகுதிகளில் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் லேசான மழையும், பெய்ய வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.