தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட்..!! அடுத்த 3 மணி நேரத்தில் இந்த மாவட்டங்களை தும்சம் செய்ய போகும் பருவமழை ..!!

0
118
#image_title

தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட்..!! அடுத்த 3 மணி நேரத்தில் இந்த மாவட்டங்களை தும்சம் செய்ய போகும் பருவமழை ..!!

தமிழகத்தில் கடந்த மாத இறுதியில் தொடங்கிய வடகிழக்கு பருவ மழையானது இன்னும் சில வாரங்களுக்கு நீட்டிக்க கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் இலங்கை மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதியில் உருவான ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சியானது காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவான நிலையில் அவை தற்பொழுது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று இருக்கிறது. நாளை புயலாக வலுக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இன்னும் மூன்று நாட்களுக்கு இதன் தீவிரம் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

இதனால் தமிழகம், புதுவையில் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதன்படி தமிழகத்தில் சென்னை, திருவள்ளுர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டு இருக்கிறது.

மேலும் நாகப்பட்டினம், தென்காசி, தேனி, கடலூர், அரியலூர், திருவாரூர், திருநெல்வேலி,, கள்ளக்குறிச்சி, வேலூர், கோவை உள்ளிட்ட 21 மாவட்டங்களுக்கு அடுத்த 3 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்ட தலைநகர் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளுர் ஆகிய மாவட்டங்களில் அனைத்து பள்ளிகளுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கிறது.