ஆன்லைனில் பிரியாணி ஆர்டர்! பெண்ணின் உயிரைக் குடித்த அதிர்ச்சி சம்பவம்!

0
227

ஆன்லைனில் பிரியாணி ஆர்டர்! பெண்ணின் உயிரைக் குடித்த அதிர்ச்சி சம்பவம்!

கேரள மாநிலத்தில் ஆன்லைனில் பிரியாணி ஆர்டர் செய்து சாப்பிட்ட இளம் பெண் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவ அதிகாரியும் இளம்பெண்ணுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து விளக்கம் கேட்டுள்ளார்.

கேரள மாநிலம் காசர் கோடு மாவட்டத்தில் உள்ள பெரும்பாலா என்ற ஊரினை சேர்ந்த இளம்பெண் அஞ்சு ஸ்ரீ பார்வதி. இந்நிலையில் அஞ்சு டிசம்பர் 31ஆம் தேதி ஆன்லைன் வழியாக பிரியாணி ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளார். பின்னர் அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதனையடுத்து அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஆனால் உடல்நிலை மோசமானதை தொடர்ந்து கர்நாடகாவின் மங்களூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அவர் மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படும் அஞ்சு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உணவகத்தில் உணவு சாப்பிட்டு உயிரிழந்தது கேரளாவில் இது இரண்டாவது சம்பவம்.

ஏற்கனவே  கோட்டையம் மருத்துவக் கல்லூரி செவிலியர் ஒருவர் கோழிக்கோடு உணவகத்தில் பிரியாணி சாப்பிட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் அஞ்சுவும் பிரியாணி சாப்பிட்டு உயிரை விட்டது அங்கு பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பத்தனம்திட்டாவில் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை வீணா ஜார்ஜ் கூறுகையில்,இந்த சம்பவம் தொடர்பாக உரிய அறிக்கை தாக்கல் செய்யுமாறு உணவு பாதுகாப்பு அதிகாரிக்கு உத்தரவு  பிறப்பிக்கப்பட்டுள்ளது.  மாவட்ட மருத்துவ அதிகாரியும் மாணவிக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்த அறிக்கைகளை சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளார். மேலும் உணவு தர பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தரமற்ற உணவை வழங்கிய உணவகங்களின்  மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு உணவகங்களின் உரிமங்கள் ரத்து செய்யப்படுகிறது. எனவும் அவர் தெரிவித்தார்.

ஒரே வாரத்தில் இரண்டு பேர் தரமற்ற உணவால் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே சுகாதாரத்துறை அமைச்சர் இது தொடர்பான விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.