Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு! ஆசிரியர்களுக்கு பாடப்பட்ட அதிரடி உத்தரவு!

நோய்த்தொற்று பரவல் காரணமாக தமிழ்நாட்டில் பதினோராம் வகுப்பு மாணவர்கள் வரை தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு இருக்கின்றது. இந்த நிலையில், பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு மே மாதம் மூன்றாம் தேதி ஆரம்பிக்க இருந்த நிலையில், நோய் தொற்று பரவ காரணமாக, தேதி குறிப்பிடாமல் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது மாணவர்கள் வீட்டிலிருந்தபடியே படிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் நாளை முதல் பள்ளிக்கு வர வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கின்ற நிலையில், ஆசிரியர்கள் வீட்டிலிருந்தவாறே பொதுத் தேர்வுக்கு மாணவர்களை தயார் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.பொதுத் தேர்வுக்கு தேவைப்படும் முக்கியமான வினாக்கள் மற்றும் பாடங்களை மாணவர்களுக்கு எடுத்துரைத்து தேர்வில் அதிக மதிப்பெண்கள் வாங்கும் விதத்தில் பயிற்சி அளிப்பது முக்கிய தேவை என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

நாளொன்றுக்கு ஒவ்வொரு பாடத்திலும் வினாக்களை தேர்வு செய்து அதனை நாள்தோறும் தேர்வாக நடத்திட வேண்டும் எனவும், தேர்தல் வினாத்தாள்கள் நாள்தோறும் முதன்மை கல்வி அலுவலகத்தில் இருந்து ஆசிரியர்களின் வாட்ஸ்அப் குழுவிற்கு அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

அவற்றை எடுத்து மாணவர்களுக்கு இணைய தளத்தில் பகிர்ந்து நாள்தோறும் தேர்வு எழுத வைத்து விடைத்தாள் நகலை பெற்றுக் கொள்ள வேண்டும். அவற்றை அன்றே திருத்தி மதிப்பெண் விவரத்தையும் மாணவர்களுக்கு அனுப்பவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அந்த மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்கள் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற கூடுதல் பயிற்சி கொடுக்க வேண்டும் ஆகவே ஆசிரியர்கள் இதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

Exit mobile version