Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நாட்டின் அலுவல் மொழியை மதிக்க மத்திய அரசுக்கே ஆணை! ஹை கோர்ட் அதிரடி!

Order to the Central Government to respect the official language of the country! High Court Action!

Order to the Central Government to respect the official language of the country! High Court Action!

நாட்டின் அலுவல் மொழியை மதிக்க மத்திய அரசுக்கே ஆணை! ஹை கோர்ட் அதிரடி!

மதுரையில் எம்.பி சு வெங்கடேசன் அவர்கள் மதுரை ஐகோர்ட் கிளையில் ஒரு மனுவை தாக்கல் செய்தார். அந்த மனுவில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை பணியிடங்களுக்கு சுமார் டிசம்பர் 20-ம் தேதி எழுத்துத் தேர்வு நடத்துவதற்கான அறிவிப்பு ஒன்று வெளியானது. தேர்வு மையங்கள் வடமாநிலங்களில் 5, தென் மாநிலங்களில் 2, மேற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் தலா ஒன்று என்ற விகிதத்தில் அமைந்துள்ளன.

தமிழகத்திலும், புதுச்சேரியிலும் மையங்கள் இல்லை. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தேர்வர்கள் நலன் கருதி ஒரு மையம் அமைக்க மத்திய உள்துறை அமைச்சகம் சி.ஆர்.பி.எஃப் பொது இயக்குனருக்கு கடிதம் எழுதினேன். அதற்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் இடம் இருந்து வந்த பதில் கடிதம் ஹிந்தியில் இருந்ததால், அதன் உள்ளடக்கத்தை அறிய இயலவில்லை.

இதன் மூலம் சட்டம் மற்றும் நடைமுறைகள் மீறப்பட்டுள்ளது. இது குறித்து உள்துறை அமைச்சகத்திற்கு எழுதிய கடிதத்திற்கும் பதிலும் இல்லை. மேலும் ஹிந்தி கடிதத்தை திரும்பப் பெறவோ, அந்த பதிவின் ஆங்கில வடிவத்தை அனுப்பவோ நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. தமிழகத்தில் கேட்கப்படும் கேள்விகளுக்கு ஹிந்தியில் மட்டுமே பதில் அளிக்கும் நடைமுறையும் தொடர்கிறது.

இது அரசியல் சாசன உரிமைகள், மற்றும் அலுவல் மொழிச் சட்டத்திற்கு முரணானது. மேலும் தமிழக எம்.பி களுக்கு மத்திய அரசு அனுப்பும் கடிதங்களை ஆங்கிலத்தில் மட்டுமே இருக்க வேண்டும். இந்த நடைமுறைகளை மீறும் அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என அவர் தன் மனுவில் தெரிவித்திருந்தார். இந்த வழக்கில் ஏற்கனவே விசாரிக்கப்பட்டு தீர்ப்பு மட்டும் ஒத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது ஒரு மாநில அரசு எந்த மொழியில் மத்திய அரசுக்கு விண்ணப்பம் அனுப்புகிறதோ அந்த மொழியிலேயே மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட் கிளை நீதிமன்றம் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. மேலும் அந்த உத்தரவில் இந்த விவகாரத்தில் மனுதாரருக்கு இந்தி மொழியில் பதில் அனுப்பப்பட்டுள்ளது. விதியை மீறும் எண்ணமில்லை என மத்திய அரசு தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும் மத்திய அரசு மற்றும் அதன் அலுவலர்கள் இந்திய அலுவல் மொழிச் சட்டத்தை முறையாகப் பின்பற்றவும் உத்தரவிடப்படுகிறது என்று நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

Exit mobile version