இயற்கை விவசாயம்: செடிகளில் ஒரு பூச்சி தாக்குதல் கூட இருக்காது இந்த சக்தி வாய்ந்த கரைசலை தெளித்தால்!!

0
204
#image_title

இயற்கை விவசாயம்: செடிகளில் ஒரு பூச்சி தாக்குதல் கூட இருக்காது இந்த சக்தி வாய்ந்த கரைசலை தெளித்தால்!!

உங்கள் வீட்டு தோட்டத்தில் உள்ள செடிகள் பூச்சி தாக்குதல் இன்றி ஆரோக்கியமாக வளர இயற்கை கரைசலை செடிகளுக்கு பயன்படுத்துங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)வேப்ப எண்ணெய்
2)காதி சோப்

செய்முறை:-

ஒரு கட்டி காதி சோப்பை ஒரு காய்கறி சீவல் கொண்டு சீவிக் கொள்ளவும்.பிறகு இதை ஒரு பாத்திரத்தில் போட்டு ஓரு கப் தண்ணீர் ஊற்றி கலக்கவும்.

பிறகு அதில் 250 மில்லி வேப்ப எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.இதை 2 மணி நேரம் ஊற வைத்து பின்னர் ஒரு பாத்திரத்திற்கு இருமுறை வடிகட்டி கொள்ளவும்.

பிறகு 10 லிட்டர் தண்ணீரில் 500 மில்லி வேப்ப எண்ணெய் கரைசல் சேர்த்து செடிகளுக்கு தெளித்தால் பூச்சி தாக்குதல் இன்றி செடி ஆரோக்கியமாக வளரும்.

தேவையான பொருட்கள்:-

1)வேப்பம் கொட்டை
2)தண்ணீர்

செய்முறை:-

ஒரு கப் வேப்பங்கொட்டையை உரலில் போட்டு இடித்து எடுத்துக் கொள்ளவும்.பிறகு அதில் இரண்டு கப் அளவு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.

இதை நன்கு ஆறவிட்டு ஒரு பாட்டிலுக்கு வடிகட்டி செடிகளுக்கு தெளித்து வந்தால் பூச்சி தாக்குதல் இன்றி செடிகள் ஆரோக்கியமாக வளரும்.