இயற்கை விவசாயம்: இதை பயன்படுத்தினால் இனி யூரியாவிற்கு நோ சொல்லிடுவீங்க!!

0
282
#image_title

இயற்கை விவசாயம்: இதை பயன்படுத்தினால் இனி யூரியாவிற்கு நோ சொல்லிடுவீங்க!!

இன்று பலர் இயற்கை விவசாயத்திற்கு மாறி வருகின்றனர்.இன்றைய தலைமுறையினருக்கு இயற்கை விவசாயம் குறித்த புரிதல் மற்றும் ஆர்வம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.இயற்கை விவசாயத்தில் பயன்படுத்தக் கூடிய அனைத்து பொருட்களும் இயற்கை சார்ந்து கிடைக்க கூடியவையாக இருக்கும்.

பயிர்களை வளர வைக்க யூரியா போன்ற இராசனாய உரங்களை பயன்படுத்தாமல் மாட்டில் இருந்து கிடைக்க கூடிய பொருட்களை கொண்டு கன ஜீவாமிர்தம் தயாரித்து பயன்படுத்துங்கள். இவை செடிகளுக்கு சிறந்த வளர்ச்சியூக்கியாக செயல்படுகிறது.

கன ஜீவாமிர்தம் தயாரிக்க தேவைப்படும் பொருட்கள்:-

நாட்டு மாட்டு சாணம்
நாட்டு மாட்டு கோமியம்
நாட்டு சர்க்கரை
பயறு மாவு
மண்

செய்முறை:-

ஒரு அகலமான பிளாஸ்டிக் பாத்திரத்தில் ஒரு கிலோ மாட்டு சாணம்,1/2 லிட்டர் மாட்டு கோமியம் சேர்த்து கலக்கவும்.

பிறகு அதில் 1/4 கிலோ பயறு மாவு ஒரு கைப்பிடி அளவு வரப்பு மண்,1/4 கிலோ நாட்டு சர்க்கரை சேர்த்து புட்டு மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.

பிறகு இதை வறட்டி போல் தட்டி நிழலான இடத்தில் வைத்து 2 வாரங்களுக்கு காயவைத்து கொள்ளவும்.இதை தான் கன ஜீவாமிர்தம் என்று இயற்கை விவசாயத்தில் அழைக்கிறார்கள்.
பிறகு 10 லிட்டர் தண்ணீரில் இந்த கன ஜீவாமிர்தத்தை உடைத்து போட்டு நன்கு கலக்கி செடிகளின் வேர் பகுதியில் படும்படி ஊற்றவும்.இவ்வாறு வாரம் ஒருமுறை செய்து வந்தால் செடிகள் பூச்சி தாக்குதல் இன்றி ஆரோக்கியமாக வளரும்.