திமுக பக்கம் சாயிந்த ஆஸ்கார் நாயகன்! ஸ்டாலினுக்கு ஆர்டர் போட்ட பன்னீர்செல்வம்!
தமிழக சட்டமன்ற தேர்தலானது கடந்த ஏப்ரல் மாதம் 6-ம் தேதி நடந்து முடிந்தது.இந்நிலையில் மக்கள் அனைவரும் முடிவுகளை எண்ணி காத்துக்கொண்டிருந்தனர்.நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.அதில் திமுக 133 இடங்களில் முன்னிலை வகித்து திமுக அமோக வெற்றிக்கண்டது.பலர் கோலாகலமாக கொண்டாடி வந்தனர்.முதன்முறையாக தமிழகத்தில் ஆட்சியமைக்க உள்ள ஸ்டாலினுக்கு பலர் பாரட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
குறிப்பாக நரேந்திரமோடி,மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்,மேற்கு வங்க மாநில முதல்வர் பினராயி விஜயன்,அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி,ராகுல்காந்தி ஆகியோர் ஸ்டாலினுக்கு வாழ்த்துக்களை தெரவித்தனர்.அதுமட்டுமின்றி மாநில கட்சிகளின் தலைவர்கள்,திரையுலகினோர் பலர் வாழ்த்துக்களை கூறினர்.
ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான்,சமூக நீதி,கல்வி,சுகாதாரம் ஆகியவற்றில் தமிழ்நாட்டில் வரலாறு காணாத வளர்ச்சியடைய இந்தியாவின் ஒருமை பாட்டிற்கு ஒர் எடுத்துகாட்டாய் திகழ,திமுக கூட்டணிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்.அதுமட்டுமின்றி அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்,தமிழக முதலவராக பதவியேற்க உள்ள திமுக தலைவர் ஸ்டாலினுக்கு வாழத்துக்கள்.பொறுப்பை உணர்ந்து அரசின் கடமைகளை முறையாக மு.க.ஸ்டாலின் ஆற்ற வேண்டும் என தெரவித்துள்ளார்.ஆஸ்கார் நாயகனான ஏ.ஆர்.ரஹ்மான் இவ்வாறு தனது டிவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக கூறியது அவர் பக்கம் சாயிந்தது போல உள்ளது.அதுமட்டுமின்றி ஓ.பன்னீர்செல்வம் கூறியதும் ஸ்டாலினுக்கு கட்டளையிட்டது போல உள்ளது.