Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அதிரடி ஆஃபர் கொடுத்த OTT ! அதிர்ந்துபோன தியேட்டர்காரர்கள் !

தற்போதுள்ள கொரோனா பேரிடரின் காரணமாக ஆறு மாத காலங்களாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன.இந்தநிலையில் OTT தளத்தில் படங்கள் ரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றன.

ஒரு படத்திற்கு இவ்வளவு என்று  தயாரிப்பாளர்களுக்குபணம் கொடுத்துக் கொண்டிருந்த  OTT தளம் தற்போது அதிரடியான ஒரு ஆஃபரை அளித்துள்ளது. அதனைக் கண்டு திரையரங்கு ஓனர்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.  

OTTதளம் தயாரிப்பாளர்களுக்கு ஒரு பார்வையாளருக்கு கட்டணம் என்ற புதிய முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் அவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை ஒதுக்கி உள்ளதாம்.

பல தயாரிப்பாளர்கள் வட்டிக்கு கடன் வாங்கி படமெடுத்து இருப்பதால் தயாரிப்பாளர்கள் அனைவரும்  OTT தளத்தை நாடி வருகின்றனர். திரையரங்குகள் கூடிய விரைவில் திறந்தாலும் மக்கள் திரையரங்கை தேடி வர இன்னும் கொஞ்சநாள் ஆகும் என்பதால் தற்போது தயாராகியிருக்கும் 90 படங்களில் 50 படங்களை ஆவது  OTT தளத்தில் ரிலீஸ் செய்யும் கட்டாயத்தில் உள்ளனர் தயாரிப்பாளர்கள்.

கடந்த மூன்று மாதங்களிலேயே 5 படங்கள்  OTTல் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் 25 படங்கள் பேச்சுவார்த்தையில் இருப்பதாகவும் மற்றும் சில படங்கள் வரிசை கட்டி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதைக்கண்ட தியேட்டர் உரிமையாளர்கள் தயாரிப்பாளர்களை பலவாறு இகழ்ந்து பேசி ஆத்திரத்தை தீர்த்து வருகின்றனர்.

Exit mobile version