Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

எங்கள் நிறுவனத்திற்கும் திமுகவுக்கும் தொடர்பில்லை: ஜிஸ்கொயர் நிறுவனம் விளக்கம் 

#image_title

எங்கள் நிறுவனத்திற்கும் திமுகவுக்கும் தொடர்பில்லை: ஜிஸ்கொயர் நிறுவனம் விளக்கம்

எங்கள் ஜிஸ்கொயர் நிறுவனம் வரி ஏய்ப்பு யாதும் செய்யவில்லை என்றும், திமுக குடும்ப உறுபினர்களுக்கும் எங்கள்  ஜிஸ்கொயர் நிறுவனத்திற்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை என்றும் அந்த நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது .

மேலும் ஜிஸ்கொயர்  நிறுவனம் திமுகவை சேர்த்த ஒரு நபருக்கு சொந்தமானது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குறிபிட்டுள்ளார். மேலும் ஜிஸ்கொயர்  நிறுவனம் ரூ  38 ஆயிரம் கோடி மதிப்பிலான சொத்து இருபதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குறிபிட்டுள்ளார்.

மேலும் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் ஜிஸ்கொயர்  நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரி துறை அதிரடி சோதனை நடத்தி வருகிறது இந்நிலையில் ஜிஸ்கொயர்  நிறுவனம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளனர் .

இதுகுறித்து ஜிஸ்கொயர்  நிறுவனம் அறிக்கையில் வரி ஏய்ப்பு யாதும் செய்யவில்லை அது போல் பாஜக தலைவர் அண்ணாமலை அதிக அளவிலான நிலங்களை முறைகேடாக கையகபடுத்தவும் இல்லை என்று விளக்கம் அளித்துள்ளது.

பாஜக தலைவர் அண்ணாமலையின் செயலால் எங்கள் நிறுவனத்தின்  மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கை சிதைந்துள்ளது. படித்த தலைவர் இது போன்ற கருத்துகளை கூறியதால் அதை மக்கள் நம்புகிறார்கள், மேலும் ஜிஸ்கொயர் நிறுவனத்திற்கும் திமுக குடும்ப உறுபினர்களுக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை என்று விளக்கம் அளித்துள்ளது . மேலும் திமுக குடும்ப கட்டுபாட்டில் எங்கள் நிறுவனம் இல்லை என்றும் குறிப்பிடபட்டுள்ளது.

எங்கள் நிறுவனத்திற்கு ரூ 38,827.70 கோடி சொத்து இருபதாக அண்ணாமலை கூறுவது உண்மைக்கு புறம்பானவை, அடிப்படை ஆதாரமற்றவை. அனைத்துமே ஜோடிக்கப்பட்டவை எங்கள் நிறுவனம் திமுக ஆட்சி வருவதற்கு முன்பே 2012 ஆம் ஆண்டு அக்டோபர் 12 ஆம் தேதி பதிவுசெய்யபட்டது எங்கள் நிறுவனத்தின் மீது எந்த ஊழல் குற்றசாட்டும் இல்லை எங்கள் நிறுவனத்தின் பங்குதாரர்களின் திட்டங்களின்  தவறாக குறிபிடப்பட்டுள்ளது.

பிரபல கட்டுமான நிறுவனமான ஜிஸ்கொயர்  குரூப்ஸ்  நிறுவனத்திற்கு தொடர்புடைய 50க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிறுவனம் சென்னையை தலைமையிடமாக கொண்ட ஜிஸ்கொயர்  நிறுவனம்  திருச்சி, கோவை ,பெங்களூர்,ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் செயல்பட்டு வருகிறது.

நிறுவனத்தில் முக்கிய பொறுப்பில் உள்ளவர்கள் வீடுகள், அண்ணாநகர் சட்டமன்ற உறுப்பினர் மோகன், அவரது மகன் கார்த்திக் வீடுகளிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

Exit mobile version