Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஆண் நண்பர்களுடன் சென்ற சிறுமிக்கு ஏற்பட்ட விபரீதம்! 6 பேர் கூட்டு பாலியல் பலாத்காரம்!

உத்தர பிரதேசத்தில் பரேல்லி என்ற மாவட்டத்தில் 18 வயது உடைய ஒரு பெண் தனது நண்பர்களுடன் ஸ்கூட்டியில் சென்ற பொழுது நண்பர்களை தாக்கிவிட்டு 6 நபர் கொண்ட கும்பல் அந்த பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த சம்பவம் உத்தர பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவம் பற்றிய தகவல்கள் மே 31ஆம் தேதி ஊரடங்கின் போது ஏற்பட்டதாக உண்மைகள் வெளி வந்தது.

கடந்த சனிக்கிழமை அன்று பாதிக்கப்பட்ட பெண் தனது பெற்றோர் இடம் நடந்த உண்மையைப் பற்றி கூறியுள்ளார். மேலும் அவர்கள் அந்தப் பெண்ணை கொலை செய்வதாகவும் சொன்னார்கள் என்றும் கூறியுள்ளார்.

அதன்பின் அந்த பெண்ணின் மூத்த அண்ணன் மற்றும் அந்தப் பெண்ணின் பள்ளி நண்பர்கள் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

FIR பதிவு செய்த ரோகித் சிங் சாஜ்வான் அவரது படையினர், அந்த பெண்ணின் கிராமத்திற்கு சென்று விசாரணை செய்தனர். குற்றவாளிகள் அதே கிராமத்தில் தலைமறைவாக இருப்பதாக தகவல் வந்த நிலையில் , பல காவல் படை கொண்ட குழுக்கள் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரில், ” நான் எனது பள்ளி நண்பர்களுடன் ஸ்கூட்டியில் சென்று கொண்டிருந்தென், இன்னொரு நண்பர் இன்னொரு பைக்கில் வந்து கொண்டிருந்தார், அப்பொழுது கிராமத்தை கடந்து வழியாக செல்லும் பொழுது , ஒரு சில இளைஞர்கள் எங்களை தடுத்து நிறுத்தினர்”. என்று அந்தப் பெண் கூறினார்.

,மூன்று இளைஞர்கள் என்னை வாகனத்தில் இருந்து தள்ளி விட்டு என்னுடன் வந்த நண்பர்களை அடித்தார்கள். என்னுடைய ஒரு நண்பர் அங்கிருந்து தப்பித்த நிலையில் மற்றொருவர் மிகவும் மோசமாக காயமடைந்த சுயநினைவை இழந்தார். என போலீசார் விசாரணையில் அந்தப் பெண் தெரிவித்தனர்.

பிறகு அவர்கள் என்னை அருகில் உள்ள உள்ளத்தில் அருகில் உள்ள கால்வாய் அருகே இழுத்து சென்று என்னை பலாத்காரம் செய்தனர். நான் உதவி கேட்டுக் கொண்டே இருந்தேன். என்னை பலாத்காரம் செய்த பின்பு என்னை கொன்று விடுவதாக அவர்கள் மிரட்டினர்.

இன்னும் எனக்கு அவர்களின் பெயர்கள் ஞாபகம் இருக்கிறது, தர்மேந்திரா, அனோஜ், நீரஜ், அமித், நரேஷ், இதில் நரேஷ் என்பவன் தான் முதலில் மூர்க்கமாக நடந்து கொண்டால் அவன் தான் தலைவன். என அந்தப் பெண் பேசி முடித்தார்.

பிறகு போலீஸார் 18 வயது உடைய அந்த பெண் மிகவும் பயந்து உள்ளார். அவள் இந்த நிலைமைக்கு ஆளாக்கப்பட்டது அவரது குடும்பத்திற்கு சொல்ல மிகவும் பயந்து உள்ளார். முதலில் அவர் மிகவும் அமைதியாக இருந்திருக்கிறார். பின் அந்தப் பெண்ணின் சகோதரி கொடுத்த தன்னம்பிக்கையின் படி வீட்டில் சொல்லி இருக்கிறார்.

அந்தப் பெண்ணின் நண்பர் கூறியதாவது, முதலில் அவர்கள் எங்களது போனை உடைத்த எங்களை அடிக்க ஆரம்பித்தனர், அங்கு என்ன நடக்கிறது என்று எங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை, பிறகு நான் சுயநினைவு இழந்தேன், அதனால் எனது தோழியை என்னால் காப்பாற்ற முடியவில்லை என அந்தப் பெண் நண்பர் கூறியுள்ளார்.

SSP Sajwan கூறியதாவது, அவர்கள் மீது நாங்கள் எப்ஐஆர் பதிவு செய்து ஐபிசி செக்சன் 376-d எஸ்சி எஸ்டி குற்றப் பிரிவின் படி ஆறு நபர்களில் மேல் பதிவு செய்துள்ளதாக என கூறினார். அந்த பெண்ணை மருத்துவ சோதனைக்கு அனுமதிக்கப்பட்டு அந்தப் பெண் சொன்ன வாக்கு மூலம் ரெக்கார்ட் செய்யப்பட்டுள்ளது.

Exit mobile version