100 டிகிரியை தாண்டும் வெயில்!! வீட்டிலேயே முடங்கும் மக்கள்!!

0
175
Over 100 degree heat!! Paralyzed people at home!!

100 டிகிரியை தாண்டும் வெயில்!! வீட்டிலேயே முடங்கும் மக்கள்!!

கோடை காலம் என்றாலே வெயிலின் தாக்கம் அதிகமாக தான் இருக்கும். வருடாவருடம் வெயிலின் தாக்கம் அதிகமாகி கொண்டேதான் வருகிறது. தற்போது அக்னி நட்சத்திரம் இருப்பதால் வெயில் கொளுத்துகிறது. அக்னி நட்சத்திரம் ஆரம்பிக்கும் போது கோடை மழை காரணாமாக வெயிலின் தாக்கம் தெரியவில்லை. இப்போது மழை குறைந்து வெயில் மிகவும் அதிகரித்துள்ளது. வார நாட்களில் பணிக்கு செல்ல வேண்டிய கட்டாயத்தால் மக்கள் வெயிலை பொருட்படுத்தாமல் செல்கின்றர்.

ஆனால் வார இறுதி நாட்களில் குடும்பத்துடன் வெளியில் செல்லும் மக்கள் இந்த வெயிலின் காரணமாக வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். நேற்று சென்னையில் காலை முதலே வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக இருந்தது. நேரம் செல்ல செல்ல மதியம் 12 மணிக்கு மேல் வெயில் சுட்டெரித்தது.

இதனால் பெரும்பாலான மக்கள் ஞாயிற்று கிழமையான நேற்று வெயிலுக்கு பயந்து வீட்டிலேயே இருந்தனர். வெளியில் சென்றவர்களும் வெயிலின் காரணமாக இளநீர் மற்றும் ஜூஸ் கடைகளில் அதிகம் இருப்பதை பார்க்க முடிந்தது. நேற்று மட்டும் தமிழகத்தில் 13 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியது.

சென்னையில் நுங்கம்பாக்கம் மற்றும் மீனம்பாக்கம், கடலூர், ஈரோடு, கரூர் பரமத்தி, மதுரை விமான நிலையம், நாகப்பட்டினம், பரங்கிப்பேட்டை, புதுச்சேரி, திருச்சி, தஞ்சாவூர், வேலூர், திருத்தணி ஆகிய இடங்களில் வெயில் 100 டிகிரியை கடந்துள்ளது.நேற்றே 100 டிகிரியை கடந்துள்ள வெயில் இன்று மேலும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.