சேலத்தில் ஒரே நாளில் இத்தனை தொற்று பாதிப்புகளா? பீதியில் பொதுமக்கள்!

0
189
Overnight infections in Salem? Public in panic!

சேலத்தில் ஒரே நாளில் இத்தனை தொற்று பாதிப்புகளா? பீதியில் பொதுமக்கள்!

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. ஒருநாள்  பாதிப்பு எண்ணிக்கை 600 கடந்துள்ளது. தமிழகத்தில் புதிய வகை கொரோனா  தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்க கட்டாயமாக முககவசம் அணிய வேண்டும். வணிக வளாகங்களில் குளிர்சாதன பெட்டியை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.இறுதிச் சடங்கு நிகழ்ச்சியை 50 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகளை அனைத்தையும் முறையாக பின்பற்ற வேண்டும் மீறினால் அபராதம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சேலம் மாவட்டத்தில் நேற்று 7 பேருக்கு காற்று உறுதியானது.

சேலம் மாவட்டம் முழுவதும் புதிதாக  13 பேருக்கு பாதிப்பு இருப்பதாக பரிசோதனையின் முடிவில் தெரியவந்துள்ளது. மாநகராட்சி பகுதியில் ஐந்து பேருக்கும் ,எடப்பாடி, நங்கவள்ளி, மேட்டூர் பகுதியில் தலா ஒருவருக்கு மற்றும் மகுடஞ்சாவடியில்  4 பேர் என மொத்தம் 13 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.பொதுமக்கள் வெளியே செல்லும் போது முகக்கவசம் கட்டாயமாக அணிந்திருக்க வேண்டும் எனவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.