Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தேர்தல் கூட்டணிக்கு அச்சாரம் போட்ட திமுக! எந்த கட்சியுடன் தெரியுமா!

திமுகவின் மாநாடு ஒன்றில் ஹைதராபாத் நாடாளுமன்ற உறுப்பினர் அசாதுதீன் ஓவைசி பங்கேற்க இருக்கின்றார்.

சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அவர்களின் தலைமையில் இதயங்களை இணைப்போம் என்ற தலைப்பில், மாநாடு நடைபெற இருக்கின்றது இந்த மாநாட்டில் இஸ்லாமிய இயக்கங்களின் தலைவர்கள், உலமாக்கள் சமூக ஆர்வலர்கள் என்று பல்வேறு தரப்பினரும் பங்கேற்க இருக்கிறார்கள் இதற்காக இஸ்லாமிய இயக்கங்களின் தலைவர்களுக்கு அந்த கட்சியின் சிறுபான்மை நல உரிமை அணி செயலாளர் மஸ்தான் நேரில் போய் அழைப்பு விடுத்திருக்கிறார்.

இந்த நிலையிலே, அகில இந்திய மஜ்லிஸ் இ இடிஹதுல் முஸ்லிம் கட்சியின் தலைவரும் ஹைதராபாத் நாடாளுமன்ற உறுப்பினருமான அசாதுதீன் ஓவைசி நேற்று மாலையில், மஸ்தான் நேரில் போய் சந்தித்து பேசி இருக்கின்றார். அந்த நேரத்தில் இதயங்களை இனைப்போம் மாநாட்டிற்கு வரவேண்டும் என்று அவருக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். இந்த அழைப்பை ஏற்றுக்கொண்ட அவர் அந்த மாநாட்டில் பங்கேற்க இசைவு அளித்ததாக தெரிகின்றது.

பீகார் சட்டசபை தேர்தலில் தனியாக போட்டியிட்டு ஐந்து தொகுதிகளில் வெற்றி பெற்றது ஓவைசி கட்சி. அதோடு 19 தொகுதிகளில் வாக்குகளை பிரித்த காரணத்தால், ஆர்ஜேடி காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்கும் வாய்ப்பு பறிபோனது.

எதிர்வரும் தமிழக சட்டசபைத் தேர்தலில் அந்த கட்சி தமிழ்நாட்டிலும் போட்டியிட தயாராகி வருகின்றது. திமுகவுடன் கூட்டணி அமைப்பதற்கு அந்தக் கட்சி தொடர்ச்சியாக முயற்சி செய்து வருகிறது. இல்லையென்றால் தனித்து களம் இறங்கலாம் என்ற முடிவில் இருக்கிறது.பீகாரை போல நடைபெற்றால் திமுகதான் பொறுப்பு என்று தெரிவித்து வந்தது ஐ பேக் நிறுவனம் –

ஆனாலும் தமிழ்நாட்டில் அரசியல் களம் வேறு மாதிரியாக இருக்கிறது. ஆகையால் இங்கே வெற்றி காண இயலாது என்று திமுக கூட்டணியில் இருக்கின்ற காதர் மைதீன், ஜவாஹிருல்லா, போன்ற தலைவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். இந்த நிலையில்தான் இப்போது வசிக்கும் திமுக அழைப்பு விடுத்திருக்கிறது. கூட்டணிக்கு முன்னோட்டமாக தான் இந்த அழைப்பா? என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. இதன் காரணமாக, முஸ்லிம் லீக் மனிதநேய மக்கள் கட்சி ஆகிய கட்சிகள் திமுக மீது அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Exit mobile version