Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஆக்ஸிஜன் விவகாரம்! சென்னை உயர் நீதிமன்றம் மத்திய அரசுக்கு போட்ட அதிரடி உத்தரவு!

தமிழ்நாடு, புதுவை போன்ற மாநிலங்களுக்கு ஆக்சிஜன் மற்றும் தடுப்பூசி மருந்துகளை உடனடியாக வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து மத்திய அரசுக்கு உத்தரவிட்டு இருக்கிறது.சென்னை உயர் நீதிமன்றம் நியமனம் செய்திருக்கின்ற தேசிய நிபுணர் குழு பரிந்துரைகள் தொடங்கும்வரை நடவடிக்கைகளை உறுதிப்படுத்தவேண்டும், ஆக்சிஜன் தேவை அதிகரிப்பதன் காரணமாக, டி.ஆர்.டி.ஓ மூலமாக ஆக்சிஜனை உற்பத்தி வசதியை ஏற்படுத்த மத்திய அரசு ஆவண செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது..

அதோடு இங்க நோய்த்தொற்றின் மூன்றாவது அறை ஏற்படும் அபாயம் இருப்பதால் எல்லாவற்றிற்கும் தயாராக இருக்க வேண்டும் என்று உயர்நீதி நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. மூன்றாவது அறையில் ஏற்படும் இந்த நாள் எந்தவிதமான ஒரு அசம்பாவிதமும் நடக்காத வண்ணம் மத்திய அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்திருக்கிறது உயர்நீதிமன்றம்.

தமிழ்நாட்டில் ஊரடங்கு அமலில் இருப்பதால் தொற்று பாதிப்பு குறைய வாய்ப்பு இருக்கிறது என்று தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் நம்பிக்கை தெரிவித்திருக்கிறது. 12,000 ஆக்சிஜன் படுக்கைகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இதில் 5592 படுக்கைகள் பயன்பாட்டிற்கு வந்து இருப்பதாக தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறது.

மதுரை திருச்சி சேலம் கோவை மற்றும் திருநெல்வேலியில் ரெம்டிசிவர் மருந்து விற்பனை மையங்கள் ஏற்படுத்தப்பட்டு இருப்பதாக தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. அதோடு தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் சித்த மருத்துவம் ஆயுர்வேத சிகிச்சை மையங்கள் ஆரம்பிக்கப்பட்டு இருப்பதாக தமிழக அரசு தெரிவித்திருக்கிறது.தமிழகத்தில் 475 தன் ஆக்சிஜன் தேவை இருக்கின்ற சூழ்நிலையில், 419 தன் மட்டும் மத்திய அரசு ஒதுக்கீடு செய்திருப்பதாக தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறது.

எதிர்வரும் தினங்களில் 800 டன் தேவைப்படும் என்று தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. ஸ்டெர்லைட் ஆலை 15ஆம் தேதி முதல் ஆக்சிஜனை உற்பத்தி ஆரம்பிக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.செங்கல்பட்டு பகுதியில் தடுப்பூசிகள் தயாரிக்கும் மையம் ஆரம்பிப்பதற்கான டெண்டர் விண்ணப்பம் செய்ய கால அவகாசம் மே மாதம் 31-ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டு இருப்பதாக மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.

Exit mobile version