நடமாடும் மருத்துவமனை ஆகும் பேருந்துகள்!

0
142

சென்னையில் நேற்று ஒரே தினத்தில் 1291 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. நேற்று உயிரிழந்தவர்களில் 58 பேர் சென்னையை சார்ந்தவர்கள் என சொல்லப்படுகிறது. மற்ற மாநிலங்களைப் போல தமிழகத்திலும் ஆக்சிஜன் பற்றாக்குறை இருந்து வருகிறது என்று சொல்லப்படுகிறது. நோய்தொற்று அதிகரித்து வரும் சூழ்நிலையில், ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக உயிரிழப்புகள் ஏற்படுகின்றனவாம்.

இவ்வாறான சூழ்நிலையில், ஜெயின் சங்கம் என்ற தனியார் அமைப்பு சென்னை மாநகராட்சியுடன் ஒன்றிணைந்து அரசு மருத்துவமனையில் பிரத்தியேகமான ஆக்ஸிஜன் வசதியை உண்டாக்கியிருக்கிறது. தனியார் பள்ளி வாகனங்கள் தற்காலிக ஆம்புலன்ஸ் வாகனங்கள் ஆக மாற்றப்பட்டு இருக்கின்றன. அதில் ஒரே சமயத்தில் ஆறு முதல் ஏழு நபர்களுக்கு அரசு வழங்கும் அளவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இந்த திட்டம் நேற்று முதல் அமலுக்கு வந்திருக்கிறது.

அதாவது சென்னையில் சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தேவை என்றால் மருத்துவமனைகளில் படுக்கை நிரம்பி இருப்பதால் அவர்களுக்கு முதலுதவி வழங்கும் விதத்தில் இந்த வாகனத்தில் வைத்து ஆக்ஸிஜன் கொடுக்கப்படும். அதன் பின்னர் மருத்துவமனையில் இருக்கின்ற படுக்கைகளுக்கு நோயாளிகள் மாற்றப்படுவார்கள் என்று சொல்லப்படுகிறது.

இந்த சேவை முதல்கட்டமாக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை மற்றும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை போன்ற நான்கு மருத்துவமனைகளில் தொடங்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அடுத்த கட்டமாக மாநிலம் முழுவதும் இருக்கின்ற அரசு மருத்துவமனைகள் வாசல்களில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய பேருந்து சேவை ஆரம்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.