Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஆக்சிசன் பற்றாக்குறை! ஊசலாடும் நோயாளிகளின் உயிர்!

நாட்டில் நோய் தொற்று காரணமாக மரணங்களும், தொற்று பாதிப்புக்கு ஆளாகும் நபர்களின் எண்ணிக்கையும், தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.ஆகவே இதனைக் கட்டுப்படுத்துவதற்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

ஆனாலும் இந்த தொற்றின் மேகம் மிக வேகமாக இருப்பதன் காரணமாக, இந்த தொடரை கட்டுப்படுத்துவது மிக சிரமமாக இருக்கிறது என்று சொல்லப்படுகிறது.போதாக்குறைக்கு மருத்துவமனைகளில் ஆக்சிசன் பற்றாக்குறை, தடுப்பூசி பற்றாக்குறை, ஆகியவை இருப்பதாகவும், இதன் காரணமாக உயிரிழப்புகள் அதிகம் ஏற்படலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த சூழ்நிலையில் டெல்லியில் ஆக்சிசன் பற்றாக்குறை காரணமாக, நேற்று இரவு மட்டும் 20 கொரோனா நோயாளிகள் உயிரிழந்து இருப்பதாக ஒரு தகவல் கிடைத்திருக்கிறது. கையிருப்பில் இருக்கின்ற ஆக்சிசன் அரைமணிநேரத்தில் தீர்ந்துவிடும் என்ற காரணத்தால் இரநூறு நபர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என ஜெய்ப்பூர் கோல்டன் மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்திருக்கிறார்கள்

நம்முடைய நாட்டில் இந்த நோய்த்தொற்றின் இரண்டாவது அலை அதிவேகமாக பாதிப்பை உண்டாக்கி வருகிறது. நாள்தோறும் மூன்று லட்சத்தை கடந்த இருக்கிறது இந்த தொற்றின் பாதிப்பு இதன் காரணமாக, பல்வேறு மாநிலங்களில் தடுப்பூசி, ஆக்சிஜன் பற்றாக்குறை உண்டாகி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக நோயாளிகள் கொத்துக்கொத்தாக இறந்து போவதாக தெரிவிக்கிறார்கள்.எனவே போர்கால அடிப்படையில் ஆக்சிசன் வழங்க நடவடிக்கை எடுக்க கோல்டன் மருத்துவமனை நிர்வாகம் அரசுக்கு கோரிக்கைவிடுத்திருக்கிறது

Exit mobile version