Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மத்திய அமைச்சரின் இந்த அறிவிப்பு வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பு ! ப.சிதம்பரம் காட்டம் !

இந்தியா சீனாவிற்கு இடையே எல்லை பிரச்சினை தொடர்பான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெறும் சூழலில்
இந்தியாவின் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று காலை 10 மணிக்கு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட இருப்பதாக தகவல் வெளியானது.

இதனைத் தொடர்ந்து 10 மணிக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது டுவிட்டர் பக்கத்தில் பாதுகாப்புத் துறையில் 101 ராணுவ தளவாடங்களை இறக்குமதி செய்ய மத்திய அரசு தடை விதிக்கிறது என்று தெரிவித்திருந்தார்.மேலும்,பிரதமர் மோடியின் தற்சார்பு இந்தியா திட்டத்தை ஊக்குவிக்கும் விதமாக பொருட்கள் இறக்குமதிக்கு  தடை விதிக்கப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் அடுத்த 7 ஆண்டிற்குள் 4 லட்சம் கோடி மதிப்பிலான தளவாடங்களை இந்தியாவிலேயே உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் இந்த அறிவிப்புக்கு முன்னால் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில் எந்த இறக்குமதித் தடையும் தனக்குதானே விதித்துக்குள்ளும் தடையாகும் ஏனெனில் பாதுகாப்பு அமைச்சகம் தான் ராணுவ சாதனங்கள் மற்றும் தளவாடங்களை கொள்முதல் செய்கிறது எனவே இந்த வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பானது தமது அமைச்சக செயலாளர்களுக்கு மட்டும் பிறப்பிக்கப்படும் உத்தரவாகும்.

இறக்குமதி தடை என்பது கனத்த குரலின் வார்த்தையாக உள்ளது.இதன் பொருள் அவற்றை இன்று இறக்குமதி செய்வோம் 2 முதல் 4 ஆண்டிற்குள் நாம் உற்பத்தி செய்ய முயற்சிப்போம். அதன்பிறகு தடை செய்வோம் என்பதுதாகும்.
என்று ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

Exit mobile version