விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு.. பயிர் காப்பீட்டுக்கான காலக்கெடு நீட்டிப்பு..!

0
189

பயிர் காப்பீடு செய்வதற்கான காலக்கெடுவை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையால் பல இடங்களில் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன. குறிப்பாக டெல்டா மாவட்டமான மயிலாடுதுறை மற்றும் கடலூர் உள்ளிட்ட இடங்களில் கனமழையால் அதிக அளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில், வரலாறு காணாத அளவுக்கு பாதிக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்தை முதல்வர் ஆய்வு செய்தார்.

அப்போது,முதல்வரிடம் விவசாயிகள் பயிர்காப்பீட்டிற்கான தேதியை நீட்டிக்க கோரிக்கை வைத்தனர்.இதனை அடுத்து, முதலவ்ர் ஸ்டாலின் மத்திய அரசுக்கு சம்பா/ தாளடி/ பிசானம் நெற்பயிர்க் காப்பீட்டுக்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை வைத்து கடிதம் எழுதினார். இதனை அடுத்து, நெற்பயிருக்கான காப்பீட்டிற்கான அவகாசத்தை நம்பர் 21 தேதி வரை நீடித்து ஒப்புதல் வழங்கியது.

இதற்காக பொதுசேவை மையங்கள், தொடக்க வேளான் கூட்டுறவு கடன் சங்கங்கள், வங்கிகள் உள்ளிட்டவை சனி (19.11.2022) மற்றும் ஞாயிறு கிழமையில் (20.11.2022) ஆகிய நாட்களில் செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திருவள்ளூர், சேலம், திருப்பூர், செங்கல்பட்டு, இராமநாதபுரம், தேனி, திருச்சி, வேலூர், இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, ஈரோடு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ,பெரம்பலூர் அரியலூர், காஞ்சிபுரம், சிவகங்கை, திருப்பத்தூர், கரூர், தருமபுரி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், கடலூர், மதுரை ஆகிய 27 மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் 21ம் தேதி வரை பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.