Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சாலமன் பாப்பையா அவர்களுக்கு பத்ம ஸ்ரீ விருதுகள்

இலக்கியம் மற்றும் கல்வித் துறையில் ஆற்றிய சேவைக்காக சாலமன் பாப்பையாவுக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது.

நேற்று மற்றும் இன்று நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம ஸ்ரீ விருதுகள் வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. பாலிவுட் நடிகர் கங்கனா ரணாவத் மற்றும் தயாரிப்பாளர் கரண் ஜோகர் உள்ளிட்டோர் பத்ம ஸ்ரீ விருது பெற்றனர்.

இன்று டெல்லியில் 2வது நாளாக
விருதுகளை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் வழங்கி வருகிறார். பேராசியர் சாலமன் பாப்பையாவுக்கு இலக்கியம் மற்றும் கல்வித் துறையில் ஆற்றிய சேவைக்காக பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது.

மேலும் தமிழக கூடைப்பந்து வீராங்கனை அனிதாவுக்கும் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் பத்மஸ்ரீ விருது வழங்கினார்.

துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
பத்ம ஸ்ரீ விருது பெற்ற சாலமன் பாப்பையாவுக்கு பலரும் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.

Exit mobile version