Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மூன்று மாதங்களுக்கு முன் மாயமான முதியவர் எலும்புக் கூடாக மீட்கப்பட்ட சம்பவம்!

padmanabhapuram-oldman-death-issue

padmanabhapuram-oldman-death-issue

மூன்று மாதங்களுக்கு முன் மாயமான முதியவர் எலும்புக் கூடாக மீட்கப்பட்ட சம்பவம்!

கன்னியாகுமாரி மாவட்டத்தில் மூன்று மாதங்களுக்கு முன் மாயமான முதியவர் எலும்புக்கூடாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முதியவர் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

இரணியல் அருகே வில்லுக்குறி மாம்பழத்துறையாறு அணை அருகே மலை பகுதியில் ஆடு மேய்பதற்காக சென்ற நபர், அப்பகுதியில் பாறை இடுக்கில் ஒரு ஆணின் எழும்புக்கூடு கிடப்பதைக்கண்டு அதிர்ச்சியடைந்து இரணியல் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் எலும்புக்கூடை கைப்பற்றி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரியில் மரபணு சோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் போலீசார் விசாரணையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன் காணாமல் போன அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் குட்டி(75) என்பது தெரியவந்துள்ளது. முதியவரை ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்து சென்று யாரேனும் முன் விரோதகாரணமாக கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version