Pagal leaf Uses & Benifits: சுகர் முதல் காச நோய் வரை.. அருமருந்தாகும் பாகல் இலை!!

0
197
Pagal leaf Uses & Benifits: From Sugar to Tuberculosis.. Pagal leaf is a medicine!!

Pagal leaf Uses & Benifits: சுகர் முதல் காச நோய் வரை.. அருமருந்தாகும் பாகல் இலை!!

அதிக மருத்துவ குணங்கள் நிறைந்த பாகல் இலை கசப்பு சுவை நிறைந்தவை.பாகற்காயை விட அதன் இலையில் அதிக சத்துக்கள் நிறைந்திருக்கிறது.பாகல் இலையில் ஜூஸ்,டீ உள்ளிட்டவை செய்து குடித்து வந்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.பாகல் இலையில் கால்சியம்,ஆன்டிபயாடிக்,பொட்டாசியம்,வைட்டமின் சி உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்திருக்கிறது.

பாகல் இலையின் பயன்கள்:

பாகல் இலையை நன்கு உலர்த்தி பொடியாக்கி உடலில் உள்ள காயங்கள் மீது பூசினால் அவை சில தினங்களில் குணமாகி விடும்.

பாகல் இலை சாறுடன் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி குடித்து வந்தால் காலரா பாதிப்பு குணமாகும்.

பாகல் இலையை அரைத்து முகத்தில் உள்ள கொப்பளங்கள் மீது பூசினால் அவை சில தினங்களில் மறைந்து விடும்.

பாகல் இலையை ஒரு கப் நீரில் கொதிக்க வைத்து குடித்து வந்தால் கல்லீரல்,இரைப்பை தொடர்பான பாதிப்புகள் நீங்கும்.

தினமும் ஒரு கிளாஸ் பாகல் இலை தேநீர் குடித்து வந்தால் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.

பாகல் இலை சாறு மற்றும் எலுமிச்சை சாறு சம அளவு எடுத்து வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் குடலில் உள்ள நச்சுக் கழிவுகள் வெளியேறும்.

ஒரு கிளாஸ் அளவு வெதுவெதுப்பான நீரில் 2 தேக்கரண்டி பாகல் இலை சாறு மற்றும் 1/4 தேக்கரண்டி விளக்கெண்ணெய் சேர்த்து குடித்தால் மலச்சிக்கல் பாதிப்பு நீங்கும்.

பாகல் இலையை அரைத்து விழுதாக்கி பற்களை துலக்கி வந்தால் சொத்தை,ஈறு வீக்கம் உள்ளிட்டவை சரியாகும்.

ஒரு கிளாஸ் மோரில் சிறிது பாகல் இலை சாறு சேர்த்து குடித்தால் வயிற்றில் உள்ள புண்கள் ஆறும்.அதேபோல் பசுமோரில் ஒரு தேக்கரண்டி பாகல் இலை சாறு கலந்து குடித்து வந்தால் காச நோய் குணமாகும்.

பாகல் இலையில் கஷாயம் செய்து குடித்து வந்தால் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.