Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சிறுநீர் வெளியேற்றும் போது வலி எரிச்சல் ஏற்படுகிறதா? இது தான் காரணம்.. இந்த வைத்தியங்கள் தான் தீர்வு!!

உடலில் உருவாகும் கழிவுகளை வெளியேற்றும் சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும்.ஆனால் இக்காலத்தில் சிறுநீரகம் சம்மந்தபட்ட பாதிப்புகளால் பெரும்பாலான மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

சிறுநீர் கழிக்கும் பொழுது வலி மற்றும் எரிச்சல் உணர்வு பலருக்கும் ஏற்படுகிறது.இதற்கு முக்கிய காரணம் உடலில் போதிய நீர் இல்லாமை தான்.உடலுக்கு தேவையான நீர் அருந்தாமையால் சிறுநீரகத்தில் அதிக தொற்றுக் கிருமிகள் தேங்கிவிடுகிறது.இதனால் சிறுநீர் வீக்கம்,சிறுநீர் வலி மற்றும் எரிச்சல் உணர்வு உள்ளிட்டவை ஏற்படுகிறது.

சிறுநீர் சம்மந்தப்பட்ட பாதிப்புகள் குணமாக கீழ்கண்ட வீட்டு வைத்தியத்தை முயற்சி செய்யுங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)சீரகம் – ஒரு தேக்கரண்டி
2)ரணகள்ளி இலை – இரண்டு
3)தண்ணீர் – ஒரு கிளாஸ்

செய்முறை விளக்கம்:-

**முதலில் ஒரு தேக்கரண்டி சீரகத்தை வாணலியில் கொட்டி வாசனை வரும் அளவிற்கு வறுக்க வேண்டும்.

**அடுத்து இரண்டு ரணகள்ளி இலையை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைக்க வேண்டும்.

**பிறகு பாத்திரத்தில் ஒரு கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி சிறிது நேரம் சூடாக்க வேண்டும்.

**அடுத்து நறுக்கி வைத்துள்ள ரணகள்ளி இலையை அதில் போட்டு சிறிது நேரம் கொதிக்க வைக்க வேண்டும்.

**பிறகு வறுத்து வைத்துள்ள சீரகத்தை கல்வத்தில் போட்டு இடித்து ரணகள்ளி கொதிக்கும் நீரில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

**இந்த பானத்தை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி பருகி வந்தால் சிறுநீர் கழிக்கும் பொழுது வலி,எரிச்சல் ஏற்படுவது கட்டுப்படும்.

தேவையான பொருட்கள்:-

1)எலுமிச்சை சாறு – ஒரு தேக்கரண்டி
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்

செய்முறை விளக்கம்:-

**முதலில் பாத்திரம் ஒன்றில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து சூடுபடுத்த வேண்டும்.தண்ணீர் சிறிது சூடானதும் இதை ஒரு கிளாஸிற்கு ஊற்றிக் கொள்ள வேண்டும்.

**அடுத்து ஒரு எலுமிச்சம் பழத்தை இரு துண்டுகளாக நறுக்கி சாறை சூடான நீரில் பிழிந்து பருக வேண்டும்.

**இந்த பானத்தை தொடர்ந்து பருகி வந்தால் சிறுநீரக பாதையில் உள்ள தொற்றுக் கிருமிகள் அழிந்துவிடும்.

தேவையான பொருட்கள்:-

1)கொத்தமல்லி விதை – ஒரு தேக்கரண்டி
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்

செய்முறை விளக்கம்:-

**முதலில் ஒரு தேக்கரண்டி கொத்தமல்லி விதையை வாணலியில் கொட்டி வாசனை வரும் வரை வறுக்க வேண்டும்.

**பிறகு இதை ஆறவைத்து மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

**பின்னர் பாத்திரத்தில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்துங்கள்.பிறகு அரைத்த ஒரு தேக்கரண்டி கொத்தமல்லி விதையை அதில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி பருகி வந்தால் வலி,எரிச்சலுடன் சிறுநீர் வெளியேறுவது கட்டுப்படும்.

Exit mobile version