Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பாகிஸ்தானில் பதவியேற்றது புதிய அமைச்சரவை! முன்னாள் பிரதமர் இம்ரான்கான் கடும் விமர்சனம்!

பாகிஸ்தானில் சமீபத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலை ஏற்றம் ஏற்பட்டதால் பொதுமக்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்தனர் அதோடு எதிர்க்கட்சி கடுமையான கண்டனங்களை பதிவு செய்தது. மேலும் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் அவர்களுக்கு எதிராக கூட்டணி கட்சி உறுப்பினர்களே கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் இம்ரான்கான் திறமையானவர் அவர் அரசை நன்றாக வழிநடத்துவார் என்று பலரும் தெரிவித்திருந்த நிலையில், தற்போது ஏற்பட்டிருந்த சூழ்நிலை அவர் மீது இருந்த நம்பக தன்மையைகுலைக்கும் விதமாக அமைந்துவிட்டது.

அதோடு அந்த நாட்டின் வரலாற்றில் பிரதமராக பொறுப்பேற்ற யாரும் இதுவரை 5 ஆண்டுகாலம் முழுமையாக ஆட்சி புரிந்ததில்லை என்பது அந்த நாட்டின் வரலாறாக இருந்து வருகிறது. அந்த வரிசையில் தற்சமயம் இம்ரான்கானும் இணைந்து விட்டார்.

இந்த நிலையில், சமீபத்தில் எதிர்க் கட்சியின் சார்பாக பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றதால் அவர் பிரதமர் பதவியிலிருந்து உடனடியாக நீக்கப்பட்டார்.

அவருக்கு பதிலாக பாகிஸ்தான் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த முன்னாள் பாகிஸ்தான் பிரதமராக நவாஸ் ஷெரீப் அவர்களின் சகோதரர் ஷபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசு புதிதாக பொறுப்பேற்றுக் கொண்டது.

இந்தநிலையில், அவர் தலைமையிலான புதிய அரசில் 31 கேபினட் அமைச்சர்கள், 3 இணை அமைச்சர்கள் உட்பட 34 அமைச்சர்கள் நேற்று பதவி ஏற்றுக் கொண்டதாக சொல்லப்படுகிறது.

இந்த பதவியேற்பு விழாவில் அதிபர் ஆரிப் ஆல்வி பங்கேற்கவில்லை இதனால் அவருக்கு பதிலாக பாகிஸ்தான் சென்ட் தலைவர் சாதிக் சஞ்சரானி புதிய அமைச்சர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார் என்று சொல்லப்படுகிறது.

இதில் புதிய உள்துறை அமைச்சராக ராணா சனாவுல்லா நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். வெளியுறவுத்துறை அமைச்சர் பதவி காலியாக இருக்கின்ற சூழ்நிலையில், வெளியுறவுத்துறை இணை அமைச்சராக ஹினா ரப்பானி கர் பதவியேற்றுக்கொண்டார்.

மேலும் புதிய சுகாதாரத்துறை அமைச்சராக பாகிஸ்தான் மக்கள் கட்சி அப்துல் காதர் படேல் நியமனம் செய்யப்பட்டார். அவருடைய நியமனம் கடுமையான விமர்சனத்தை சந்தித்திருக்கிறது என்று சொல்லப்படுகிறது.

அப்துல்காதர் மீது நில பேரம், மின்சாரத் திருட்டு, போன்ற பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதாக முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

அதோடு பயங்கரவாதிகளுக்கு உதவி புரிந்த வழக்கில் இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியிருப்பதாக பாகிஸ்தான் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Exit mobile version