Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இந்தியா – பாகிஸ்தான் போர் சற்று நேரத்தில்? எல்லை பகுதியில் பாகிஸ்தான் போர் விமானங்கள் குவிப்பு! பதற்றத்தில் காஷ்மீர் எல்லை?

பாகிஸ்தான் இந்திய எல்லை பகுதியில் போர் விமானங்களை நிறுத்தி உள்ளது. இதனால் இந்திய எல்லை பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.

பிஜேபி கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் காஷ்மீர் மாநிலத்தின் தனி அந்தஸ்து ரத்து செய்ததை அடுத்து கஷ்மீர் இனி தனி மாநிலம் அல்ல யூனியன் பிரதேசங்கள் என அறிவிக்கப்பட்டது. 29 மாநிலமாக இருந்ததை 28 ஆக அறிவித்துள்ளது. 7 யூனியன் பிரதேசங்கள் தற்போது 9 யூனியன் பிரதேசங்கள் ஆக அதிகரித்துள்ளது. இந்த
நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பை மாநிலங்களவை மற்றும் மாநிலங்கள் அவையில் எதிர்கட்சிகள் தெரிவித்தனர்.

இது தொடர்பாக நமது அண்டை நாடான பாகிஸ்தானும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இது குறித்து பாகிஸ்தான் அதிபர் கூறுகையில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370, 35ஏ ஆகிய சட்டப்பிரிவுகளை சமீபத்தில் இந்திய அரசு அதிரடியாக ரத்து செய்தது. இது காஷ்மீர் மக்களுக்கு எதிரான செயல் என்றார். ஐ.நா ஒப்பந்தத்தை தகர்க்கும் செயல் ஆகும்.

மேலும், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370, 35ஏ ஆகிய சட்டப்பிரிவுகளை இந்திய அரசு அதிரடியாக ரத்து செய்தது குறித்து ஐ.நா வில் முறையிடுவோம் என்று பாகிஸ்தான் அதிபர் கூறினார். ஆனால் இந்த விஷயத்தில் இந்தியாவிற்கே அதிக நாடுகள் ஒத்துழைப்பதாக உள்ளதால் பாகிஸ்தான் கோரிக்கையை மற்ற நாடுகள் ஏற்காமல் இருப்பதால். பாகிஸ்தான் தனிமை படுத்தபட்டதக உணர்கிறது.

இதனால் இன்று இந்திய எல்லை ஒட்டிய லடாக் பகுதியில் பாகிஸ்தான் தனது இராணுவ போர் விமானங்களை நிறுத்தி வைத்துள்ளது. இதனால் இந்திய எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது. குறிப்பாக பாகிஸ்தான் போர் விமானங்கள் ஜெ.எப்-17 ரக போர் விமானம் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது. மேலும் 3சி-130 ரக விமானங்களும் நிறுத்தியுள்ளது.

இதற்கு காரணம் இந்தியா அரசு காஷ்மீர் மாநிலத்தின் அந்தஸ்து பரிக்கபட்டதை ஏற்க்க முடியாமல் பாகிஸ்தான் இப்படி செய்கிறது. இது குறித்து நமது உளவுத்துறை மற்றும் இராணுவம் கண்காணித்து கொண்டே இருக்கிறது.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

Exit mobile version