Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இந்தியா மீது அபாண்டமாக குற்றம் சாட்டிய பாகிஸ்தான் – கண்டனம் தெரிவித்த மத்திய அரசு!

இந்தியா மீது பாகிஸ்தான் அபாண்டமாக குற்றம் சாட்டி உள்ளது. அது என்னவென்றால், இந்தியா தீவிரவாதத்திற்கு நிதியுதவி அளித்து வருவதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டுகிறது.

பாக்கிஸ்தான் கூறிய குற்றச்சாட்டுக்கு, வெளியுறவு  அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா, டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த போது, “பாகிஸ்தான் பயனற்ற குற்றச்சாட்டை கூறுகிறது” என்று சுட்டிக்காட்டினார்.

அதுமட்டுமின்றி பாகிஸ்தான் இந்தியாவிற்கு எதிராக கூறும் ஆதாரங்கள் அனைத்தும் கற்பனை அடிப்படையில் உருவாக்கப்பட்டதால் இருக்கிறது என்பதையும் உணர்த்தினார். மேலும் பாகிஸ்தானின் தீவிர செயல்பாடுகளை அனைத்து நாடுகளும் அறிந்து இருக்கிறது என்றார்.

அதனால் விரக்தியடைந்த பாகிஸ்தான் இந்தியா மீது வீண் பழி சுமத்துகிறது என்றும் அனுராக் ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் இது போன்ற செயல்களில் ஈடுபடுவதற்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

Exit mobile version