Pakistan: பாகிஸ்தான் சீனாவிடம் இருந்து அதிநவீன போர் விமானங்களை வாங்குவதாக தகவல் வெளியாகி வருகிறது.
இந்தியாவில் இருந்து பிரிந்த நாடாக பாகிஸ்தான் இருந்தாலும் சுதந்திரம் பெற்ற நாள் முதல் இரண்டு நாடுகளும் தங்களுக்குள் தொடர்ந்து பிரச்சனை செய்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் காஷ்மீர் பகுதிகளை பாகிஸ்தான் உரிமை கொண்டாடுவது தான். பாகிஸ்தான் ராணுவத்தினர் காஷ்மீர் பகுதிகளை கைப்பற்ற இந்திய ராணுவத்தினர் மீது தொடர் தாக்குதலை செய்து வருகிறார்கள்.
இது ஒரு பக்கம் இருக்க சீனாவும் இந்திய எல்லைப் பகுதிகளை ஆகரிமைப்பு செய்து வருகிறது. இந்தியா மற்றும் சீனா இடையில் தற்போது பனிப் போர் நிலவி வருகிறது. எதிரிக்கு எதிரி நண்பன் என்பது போல பாகிஸ்தான் நாட்டிற்கு ராணுவ உதவிகளை செய்து வருகிறது சீனா. அந்த வகையில் பாகிஸ்தான் ராணுவம் சீனாவிடம் இருந்து 40 ஸ்டெல்த் பைட்டர் ஜே – 35 என்று அதிநவீன வசதி கொண்ட போர் விமானங்களைப் வாங்க இருபதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இது சீனா மற்றும் பாகிஸ்தான் இரண்டு நாடுகளும் ஒன்று சேர்ந்து இந்தியாவை அச்சுறுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு இருப்பதாக சர்வதேச நாடுகளின் மத்தியில் தகவல்கள் பரவி வருகிறது. பாகிஸ்தானுக்கு அடுத்த படியாக இந்தியாவிற்கு தலைவலியாக இருக்கும் நாடு என்றால் அது சீனா. இந்திய எல்லையில் ஊடுருவலை அவ்வப்போது நடத்தி வருகிறது.
தற்போது பாகிஸ்தானில் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்த நிலையிலும் கூட அதிநவீன போர் விமானங்கள் வாங்குகிறது என்றால் பின்னணியில் சீனா இருக்கிறது என்று கூறலாம்.