Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வந்தே மாதரம் என்று கோஷமிட்ட பாகிஸ்தானியர்கள்:? இந்தியர்களுடன் கைகோர்ப்பு!!சீனாவுக்கு அடுத்தடுத்து ஆப்பு??

பாகிஸ்தானியர்கள் இந்திய தேசிய பாடலைப் பாடுவது அரிது. ஆனால் ஞாயிற்றுக்கிழமை அன்று லண்டனில் உள்ள சீனத் தூதரகத்திற்கு வெளியே போராட்டம் நடந்தது. அதில் 100-க்கு மேற்பட்ட இந்தியர்களும் பாகிஸ்தானியர்களும் கலந்து கொண்டனர். அதில் சிலர் இந்தியர்களுடன் சேர்ந்து விண்ணை பிளக்கும் அளவிற்கு சத்தமாக “வந்தே மாதரம்” என முழங்கியது பாகிஸ்தான் ஆட்சியாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தனது நாட்டைப் பற்றி கசப்பான செய்தியாக இருந்தாலும் உண்மையை பேசுவதில் நம்பிக்கை கொண்ட சில பாகிஸ்தான் மனித உரிமை ஆர்வலர் ஆரிஃப் அஜாகியா தலைமையில், சீனாவின் விரிவாக்கக் கொள்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் பல இந்திய புலம்பெயர் குழுக்களின் உறுப்பினர்களுடன் இணைந்து “சீனாவைப் புறக்கணிக்கவும்” மற்றும் “சீனாவே வெளியேறு” என்றும் கோஷமிட்டார். அது மட்டுமன்றி அஜாகியா,
“இன்று என் வாழ்க்கையில் முதல் முறையாக நான் வந்தே மாதரம் பாடினேன்” என்று கூறினார்.

அஜாகியாவுடன் சேர்ந்து பாகிஸ்தானில் உள்ள மிர்பூரைச் சேர்ந்த அம்ஜாத் அயூப் மிர்சா மற்றும் கராச்சியைச் சேர்ந்த இன்னும் சிலர், ஈரானைச் சேர்ந்த பலர், அனைவரும் தங்கள் விவகாரங்களில் சீனா தலையிடுவது எங்களுக்கு ஈடுபாடு இல்லை என்று வருத்தப்படுகிறார்கள்.

மேலும் பேசிய மிர்சா“இந்த எதிர்ப்பிற்காக நான் கிளாஸ்கோவிலிருந்து பயணம் செய்து வந்துள்ளேன். நான் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரைச் சேர்ந்தவன். சீனர்கள் கில்கிட்-பால்டிஸ்தான் முழுவதும் சிபிஇசி (சீனா-பாகிஸ்தான் பொருளாதார காரிடார்) மூலம் பெரும் பேரழிவை ஏற்படுத்தி வருகின்றன பொழுதும்
பாகிஸ்தான் அரசாங்கம் தொடர்ந்து சீனாவுக்கு தான் ஆதரவாக செயல்பட்டு வருகிறது” இதுமட்டுமின்றி பாகிஸ்தானிய அதிகாரிகளால் காஷ்மீர் மக்களுக்கு இழைக்கப்படும் அடக்குமுறை மற்றும் அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுத்தேன் என்று மிர்சா தெரிவித்தார்.

இங்கு மட்டுமின்றி அமெரிக்கா, கனடா மற்றும் உலகின் பிற பகுதிகளிலிருந்தும் சீனாவுக்கு எதிராக இதேபோன்ற போராட்டங்களை ஏற்பாடு செய்து இந்தியர்கள், சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு எதிராக பதாகைகளை ஏந்தி, சீனா தனது விரிவாக்க நடவடிக்கையை நிறுத்துமாறு செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டனர்.

சீனாவுக்கு எதிரான வளர்ந்து வரும் சீற்றம் இந்தியா மட்டுமின்றி லண்டனின் தெருக்களிலும் காணப்படுகிறது. சனிக்கிழமை இரவு மத்திய லண்டனில் உள்ள சீன தூதரக கட்டிடத்தில் ‘சுதந்திர திபெத், சுதந்திர ஹாங்காங், சுதந்திர உய்குர்ஸ்’ எனும் விளம்பரம் வெளியிடப்பட்டிருந்தது. சீனா அனைத்து அண்டை நாடுகளுடனும் எல்லைப் பிரச்சினையை வளர்த்து வைத்துள்ளது.தற்போது வெளிநாடுகளில் உள்ள தூதரங்களில் போராட்டம் நடப்பது சினர்களுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

Exit mobile version