Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அத்துமீறி பறந்த இந்திய உளவு விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் ராணுவம் அறிவிப்பு

Pakistans-army-says-it-shot-down-Indian-drone

Pakistans-army-says-it-shot-down-Indian-drone

அத்துமீறி பறந்த இந்திய உளவு விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் ராணுவம் அறிவிப்பு

பாகிஸ்தான் எல்லையில் அத்துமீறி பறந்ததாக இந்திய உளவு விமானம் ஒன்றை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் ராணுவம் அறிவித்துள்ளது.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் எல்லை கட்டுப்பாட்டு கோட்டை கடந்து பறந்து வந்த இந்திய உளவு விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டது என பாகிஸ்தான் ராணுவத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

இந்திய உளவு விமானம் ஒன்று இந்திய பாகிஸ்தான் எல்லை பகுதி அமைந்துள்ள சங்க் பகுதியில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு கோட்டை தாண்டி பறந்து வந்தது. இவ்வாறு உளவு பார்ப்பதற்காக, பாகிஸ்தான் எல்லை பகுதிக்குள் அத்துமீறி 600 மீட்டர் தூரம் வரை அந்த சிறியரக உளவு விமானம் நுழைந்தது.  இந்திய விமானத்தின் அந்த அத்துமீறிய செயலுக்கு பாகிஸ்தான் ராணுவம் அந்த விமானத்தை சுட்டு வீழ்த்தி தக்க பதிலடி கொடுத்தது.

இந்திய ராணுவத்தின் இதுபோன்ற அத்துமீறிய செயல்பாடுகள், இரு நாடுகளுக்கிடையே ஏற்கனவே வகுக்கப்பட்ட விதிமுறைகளையும்,மேலும் இருநாட்டு வான்வழி ஒப்பந்தத்தையும் மீறிய செயலாகும்.  மேலும், 2003-ம் ஆண்டு இரு நாடுகளுக்கிடையே உருவாக்கப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இந்திய ராணுவம் அவமரியாதை செய்வதை தான் இந்த ஊடுருவல் உணர்த்துகிறது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

இதைபோலவே கடந்த காலங்களிலும் இந்திய விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் ராணுவம் கூறியுள்ளது. ஆனால், அதை இந்தியா தகுந்த ஆதாரங்களுடன் மறுத்து வந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Exit mobile version