Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பாகிஸ்தானின் ஊடுருவும் முயற்சி முறியடிக்கப்பட்டது – இந்திய ராணுவ உயர் அதிகாரிகள் தகவல்!

பனிக்காலத்தை தங்களுக்கு  சாதகமாக பயன்படுத்தி, இந்தியாவிற்குள் ஊடுருவ முயற்சித்த பாகிஸ்தான் வீரர்கள் தீட்டிய சதித் திட்டத்தை முறியடித்து விட்டதாக இந்திய ராணுவ உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

அதாவது, எல்லையில் சுமார் 300 ராணுவ வீரர்களை ஊடுருவ தயார் நிலையில் பாகிஸ்தான் நிறுத்தியுள்ளதாகவும், அதற்காக துப்பாக்கி சூடு நடத்திவருவதாகவும் ஏற்கனவே இந்திய ராணுவ உயர் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். 

அண்மையில், எல்லையில் நடந்த தாக்குதலின் போது அப்பாவி மக்களும், இந்திய ராணுவ வீரர்கள் 11 பேரும் கொல்லப்பட்டனர். அந்த சம்பவத்திற்கு பதிலடி கொடுத்த இந்திய வீரர்கள், பாகிஸ்தான் முகாம்களையும், தீவிரவாத பதுங்கு இடங்களையும் தாக்கினர்.

இந்தியா நடத்திய தாக்குதலில், பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் பத்திற்கும் மேற்பட்ட நபர்கள் உயிரிழந்தனர். தற்போது இந்திய ராணுவ உயர் அதிகாரிகள் பாகிஸ்தான் ஊடுருவ முயற்சித்த முயற்சி முறியடிக்கப்பட்டு விட்டதாக தெரிவித்துள்ளனர்.

Exit mobile version