பக்ரீத் பண்டிகை எப்போது தெரியுமா ?

0
145
pakrith date

உலகிலுள்ள இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் முக்கியமான பண்டிகை பக்ரீத். இது ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமிய நாட்காட்டியின் 12வது மாதமான துல் ஹஜ்ஜின் பத்தாவது நாளில் கொண்டாடப்படுகிறது. 

அன்று ஆரோக்கியமான ஆடு, மாடு, ஒட்டகம் போன்றவற்றை இறைவனுக்கு பலியிட்டு, அதனை ஏழை எளியோர் உடன் பகிர்ந்து,உண்டு பக்ரீத் பண்டிகையை கொண்டாடப்படுகிறது. இதனை தமிழில் ‘தியாகத் திருநாள்’ என்றும், அரபியில் ‘ஈத் அல்-அதா’ என்றும் அழைக்கின்றனர்.

 பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் தேதியை குறித்து தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப்  அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்

 அதில், ஜூலை மாதம் 21 ஆம் தேதி அன்று மார்ச் மாத பிறை நிலவானது சென்னையிலும்  ஏனைய மாவட்டங்களிலும் காணப்படவில்லை. இந்தப்  பிறை நிலவை வைத்தே தான், பக்ரீத் பண்டிகை கொண்டாடும் தினத்தை கணிப்பார்கள்.

ஆகையால் ஜூலை 23ஆம் தேதி அன்று, துல்ஹஜ் மாத முதல் பிறை என்று உறுதி செய்யப்படுகிறது. இந்தப் பிறையே இவர்கள் கணக்கில் எடுத்துக் கொள்வதாக தெரிகிறது.அதன்படி பார்த்தால் அன்றிலிருந்து பத்து நாட்கள் கடந்து அதாவது ஆகஸ்ட் 1ஆம் தேதியன்று ஈதுல் அத்ஹா எனப்படும் பக்ரீத் நிகழ்வு வருகிறது.

அன்றைய தினமே பக்ரீத் பண்டிகை தமிழகம் முழுவதும் கொண்டாடப்படும் என்று தலைமை ஹாஜி சலாவுதீன் முகமது அயூப் தெரிவித்துள்ளார்.